போராட்டமே வாழ்க்கை.
போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ இயலாது. பிறப்பு முதல் இறப்பு வரை போராட்டம் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது...
பிறந்த குழந்தைக் கூட அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது...
போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவது தான் வாழ்க்கை...
வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்திக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டியுள்ளது...
மனித வாழ்வே அறைகூவல் நிறைந்தது தான். மனித குலம் காடுகளில் தான் தனது வாழ்வைத் தொடங்கியது. ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்த்துப் போராடியே தன்னைத் தக்க வைத்துக் கொண்டது...
கொடிய விலங்குகள், மலைப்பாம்புகள், நச்சுப் பூச்சிகள் போன்றவற்றை எதிர்த்தே வாழ்ந்து வந்தான் மனிதன். இதற்கிடையே மழை, வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவையும் மனிதனை எதிர்த்துப் போர் புரிந்தன...
சரியான நேர்மையான வாழ்க்கைப் பயணப் பாதை, முட்கள் நிறைந்த கரடுமுரடான பாதை தான்...
இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் அவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாயமற்ற விமர்சனங்களும் தான் நிறைந்திருக்கும்...
கப்பல் வடிவமைக்கப்படுவது கரையில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு அல்ல...!
வாழ்க்கையும் கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பதற்கு அல்ல...! வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம் இங்கே இருக்கின்றன...
வாழ்வில் இருந்து விலகி ஓடும் மனிதர்களை விட, எதிர்த்து நின்று போராடுகிறவர்களே உயர்ந்த இடம் பெறுகின்றனர்...
வாழ்க்கைப் பாதையில் பயணிக்கின்றோம் என்றால், நாம் நற்சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்ப வேண்டும்...
ஆம் நண்பர்களே...!
வாழ்க்கை என்பது ஒரு போராட்டமே. போராட்டம் இல்லாமல், எதிலும் வெற்றி பெறுவது குதிரைக் கொம்பே...!
போராட்டக் களத்தில் காயப்படுவதுண்டு. நமக்கும் வாழ்வில் காயங்கள் வரலாம். சில ஆறாத வடுவையும் ஏற்படுத்தலாம்...
மனம் தளர்ந்து விட வேண்டாம்...
உடுமலை சு. தண்டபாணி
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.