வெளிநாட்டு வேலைவாய்ப்பு இடைநிறுத்தம்.
13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பரிந்துரைப்பதற்கும், ஒப்பந்த சேவைக் காலத்தில் பணியகத்தின் பதிவு உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நபர்களைக் கவனிப்பதற்கும், பணியிடத்தில் ஏதேனும் பிரச்சினையான சூழ்நிலை ஏற்பட்டால், அதைப் பற்றி அறியவும் சேவை ஒப்பந்த விதிமுறைகளை மீறாத வகையில் தேவையான நிவாரணம் வழங்கவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும், அந்த நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப தலையிட்ட வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பொறுப்புகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது
சேவை ஒப்பந்த மீறல்கள் தொடர்பாக பணியகத்திற்கு வேலை தேடுபவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம், தீர்வுகளை வழங்க முன்வராத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களும் பணியகத்துடனான ஒப்பந்தங்களை மீறியுள்ளதால், அது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை பணியகம் மேற்கொண்டுள்ளது.
மேலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு சேவை பணியகம் மேலும் குறிப்பிடுகிறது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.