மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆயுர்வேதம்.
மாதவிடாய் சுழற்சி என்பது நச்சுக்களை புதுப்பித்து அகற்றுவதற்கான வாய்ப்பாகும். இந்த இழப்பை நிரப்ப புதிய இரத்த அணுக்கள் உருவாக்கப்படும்.
ஆயுர்வேதத்தின் படி பெண்ணின் மாதவிடாய் சுழற்சி வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றால் பாதிக்கப்படுகிறது.
அபன வாதா என்பது மாதவிடாய் சுழற்சியை நிர்வகிக்கும் வாதத்தின் துணையாகும். இது உடலில் அடி வயிற்றின் கீழ் அமைந்துள்ளது.
மன அழுத்தம், முறையற்ற உணவு, நோய் மற்றும் சில மருந்துகள் போன்ற காரணங்களால் இந்த குறிப்பிட்ட ஏற்றத்தாழ்வு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை உண்டாக்குகிறது.
மாதவிடாய் சுழற்சி
தைராய்டு, இரத்த சோகை போன்ற மருத்துவ நிலைமைகளும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை உண்டாக்கும்.
📌 அசோகா
அசோகா ஆயுர்வேதத்தில் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் சக்தி வாய்ந்த மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக எண்டோம்ட்ரியோசிஸ் மற்றும் மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்ட நிலைகளுக்கு சிகிச்சையளிக்க கருப்பை டானிக் ஆக பயன்படுத்தப்படுகிறது. இது கருப்பையை வலிப்படுத்துகிறது. அதிக மாதவிடாய் இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது அதோடு அசெளகரியத்தை நீக்குகிறது.
அசோகபட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர், மாதவிடாய் சீரற்று இருக்கும்போது மருந்தாக பயன்படுகிறது. இதில் ஃப்ளவனாய்டுகள், டானின்கள் மற்றும் கிளைகோசைடுகள் நிறைந்திருப்பதல் இது கருப்பை மருந்தாக செயல்படுகின்றன. மற்றும் கருப்பையின் தசைகளில் இருக்கும் இழைகளில் நேரடி தாக்கத்தை உண்டாக்குகிறது.
அசோகாவில் உள்ள இயற்கையான பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், மாதவிடாய் ஓட்டத்தை இயல்பாக்குவதற்கு கருப்பையை தூண்டுகிறது. ஹார்மோன் சமநிலையை ஊக்குவிக்கும் இது, மெனோபாஸ் அறிகுறிகளான ஹாட் ஃப்ளஷ், இரவு வியர்வை துக்க பிரச்சனைகள், மன நிலை மாற்றங்கள் மற்றும் எடை அதிகரிப்பு அறிகுறிகளை குறைக்கின்றன.
📌 அஸ்வகந்தா
அஸ்வகந்தா உடலில் நாளமில்லா மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. அட்ரீனல் சுரப்பிகளில் இருந்து கார்டிசோலின் உற்பத்தியை சமப்படுத்த உதவுகிறது. இது கவலை தொடர்பான சிகிச்சையில் பயனளிக்கும்.
ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஆழ்ந்த தூக்கமின்மை போன்ற மாதவிடாய் நோய்க்குறியின் உணர்ச்சி அறிகுறிகளை அஸ்வகந்தா சீர் செய்யும். ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் மூலிகை அஸ்வகந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
📌 செம்பருத்திப்பூ
செம்பருத்திப்பூவை தேநீராக தயாரித்துக் குடிப்பதால், மாதவிடாய் சீரான முறையில் வரும். உடலுக்கு டானிக் போன்று வேலை செய்யும் மூலிகை தேநீர் இது. மாதவிடாய் நின்ற பிறகு வரும் அறிகுறிகளில், ஹாட் ஃப்ளஷ்கள் எனப்படும் உடலின் வெப்ப நிலையில் திடீரென ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சீர் செய்ய செம்பருத்திப்பூவின் சாறு உதவும்.
இது, உடலில் பித்தத்தை சீர்செய்யும். இரத்தத்தில் அதிக வெப்பத்தை சமநிலை செய்யும் திறன் கொண்ட செம்பருத்திப்பூ, மாதவிடாய் நிற்கும் போது இயற்கையாகவே ஹார்மோன் சமநிலையை ஊக்குவிக்கும்.
📌கற்றாழை
சரும சுத்திகரிப்புக்கு உதவும் கற்றாழை, மாதவிடாய் பிடிப்புகளுக்கான வலி நிவாரணியாக செயல்படுகிறது. மாதவிடாய் சுழற்சி துவங்குவதற்கு முன்பு கற்றாழை சாற்றை குடிப்பது, அந்த சமயத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும்.
📌 அதிமதுரம்
மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குப்படுத்துவதில் அதிமதுரம் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. மாதவிடாய்நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு இயற்கையாக குறையும். ஈஸ்ட்ரோஜன் அளவு உடலில் குறையும் போது, அதிமதுரத்தில் உள்ள சத்துக்கள் அதை சமப்படுத்தும்.
அதிமதுரத்தின் வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர், மெனோபாஸ் தொடங்குவதற்கு முந்தைய பதற்றங்களைப் போக்க உதவும். மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் ஒழுங்குப்படுத்துவதன் மூலம் அட்ரீனல் சுரப்பிகள் சீராகும்.
📌 மஞ்சள்
அழற்சி எதிர்ப்பு பொருட்கள் நிரம்பிய மஞ்சள், மாதவிடாய் வலியை கணிசமாக குறைக்கும். மஞ்சளை பாலுடன் கலந்து குடிப்பது வலி நிவாரணியாக மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்புத்தன்மையையும் அதிகரிக்கும்.
📌 வெந்தயம்
மாதவிடாய் கால வலியை குறைக்கும் தன்மை கொண்டது வெந்தயம். வெந்தயத்தை இரவு ஊறவைத்து அடுத்த நாள் காலை ஊறிய வைந்தயத்தை மென்று சாப்பிட வேண்டும். இது மாத விடாய் வலியை குறைப்பதுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.