அறிவுக் கூர்மை என்பது யாதெனில்.
ஒருவர் வியாபாரத்தில் அறிவாளியாக இருப்பார். மற்றொருவர் கணிணித்துறையில் அறிவாளியாக இருப்பார். இன்னொருவர் காலணியைத் தைப்பதில் அனுபவம் மிகுந்தவர்களாக இருப்பார். மற்றொருவர் சமையல் செய்வதில் சிறந்தவராக இருப்பார். வேறொருவர் அரசியலில் கொடி கட்டிப் பறப்பார்...
இப்படி ஒரு குறிப்பிட்ட செயலில் திறமையாக இருந்து விட்டால், இவர்கள் எல்லாத்துறைகளிலும் அறிவாளிகள் என்று பொருளாகுமா...?
இவர்களால் தொழில் தொடர்பற்ற மற்ற சூழ்நிலைகளில் வெற்றியடைய இயலாமல் போகலாம். அப்பொழுது இவர்களின் தொழில் திறமை பொருளற்றதாகி விடும்.
இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், வியாபாரத்திலும்,
அரசியலிலும் வெற்றி அடையலாம். இப்படிப் பிழைப்பையே வாழ்க்கையின் நோக்கமாக இருப்பவர்களை அறிவாளிகள் என்று அழைக்கவியலாது...
இவர்கள் தங்கள் வாழ்க்கையை நல்வழியில் ஈடுபடுத்தாமல், வசதிகளை மட்டும் அதிகப்படுத்திக் கொள்பவர்களின் அதுபோன்ற அறிவுக் கூர்மை நமக்குத் தேவையில்லை...
நாம் எப்போதும் சிக்கல்களால் அறிவு குறைந்து விட்டது என்ற அவசர முடிவுக்கு வந்து விடக் கூடாது...
எந்தச் சூழ்நிலையையும் எப்படி அணுகுகிறோம் என்பதில் தான் சிக்கல்களுக்குத் தீர்வு இருக்கிறது...
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை விரும்பவில்லை என்பதால், அந்தச் சூழ்நிலையைத் துரத்தி விட இயலாது...
அப்போது நாம் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி, என்ன செய்தால் குறைவான பாதிப்பு இருக்கும் என்று ஆலோசித்து செயல்பட வேண்டும்...
எனவே எந்தச் சூழ்நிலையையும் விருப்பு வெறுப்பு இன்றி அணுக வேண்டும்...
ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நம் அறிவுக் கூர்மையோடு திறந்த மனதோடு ஆராய்தல் வேண்டும்..
ஆம் நண்பர்களே...!
சிக்கல்களா.?, இல்லையா...? என்பது நிகழ்வுகளில் இல்லை. அதை நாம் எப்படி அறிவுக் கூர்மையோடு நாம் ஏற்கின்றோம் என்பதில் தான் இருக்கிறது...
கிடைத்ததை வைத்து வாழ்க்கையில் மேல்நோக்கி எப்படிப் பயணிப்பது என்று காண்பது தான் உண்மையான அறிவுக் கூர்மை...
உடுமலை சு தண்டபாணி
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.