வரலாற்றில் இன்று டிசம்பர் 08.2022

திசம்பர் 8  கிரிகோரியன் ஆண்டின் 342 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 343 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 23 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1609 – இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.1825 – முதலாவது நீராவிக் கப்பல் (என்டர்பிரைசு) இந்தியாவில் சாகர் துறைமுகத்தை வந்தடைந்தது.[1]

1854 – இயேசுவின் தாய் மரியாள் பிறப்புநிலைப் பாவத்தில் இருந்து பாதுக்காக்கப்பட்டதை அறிவிக்கும் அமலோற்பவ அன்னை பற்றிய திருத்தந்தையின் தவறா வரம் ஒன்பதாம் பயசு திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டது.

1881 – ஆத்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 380 பேர் உயிரிழந்தனர்.

1907 – ஐந்தாம் குசுத்தாவ் சுவீடன் மன்னராக முடிசூடினார்.

1914 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச கடற்படை போக்லாந்து தீவுகளில் இடம்பெற்ற போரில் செருமனியக் கடற்படையைத் தோற்கடித்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் சாங்காய், மலாயா, [தாய்லாந்து]], பிலிப்பீன்சு, இடச்சு கிழக்கிந்தியா ஆகியவற்றின் மீது ஒரே நேரத்தில் தாக்குதலை ஆரம்பித்தன.

1941 – பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை சப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா சப்பான் மீது போரை அறிவித்தது.

1941 – பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு சப்பான் மற்றும் செருமனி மீது போரை அறிவித்தது.

1941 – பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.

1942 – பெரும் இன அழிப்பு: உக்ரைனின் “டேர்னோப்பில்” என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் படையினர் கிரேக்கத்தில் மதப்பள்ளபொன்றைத் தாக்கி அங்கிருந்த மதகுருக்கள் உட்பட 22 பேரைப் படுகொலை செய்தனர்.

1953 – ‘அணு அமைதிக்கே’ என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.

1963 – மேரிலாந்தில் அமெரிக்க விமானம் ஒன்று மின்னலால் தாக்கப்பட்டு வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.

1966 – எரக்கிளியோன் என்ற கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் உள்ள ஏஜியன் கடலில் மூழ்கியதில் 200 பேர் உயிரிழந்தனர்.

1969 – கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 90 பேர் உயிரிழந்தனர்.

1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: இந்தியக் கடற்படை கராச்சி நகர் மீது தாக்குதலைத் தொடுத்தது.

1972 – சிகாகோவில் போயிங் 737 விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் உயிரிழந்தனர்.

1974 – கிரேக்கத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மன்னராட்சியை இல்லாதொழிக்க மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.

1980 – பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1982 – சுரிநாமில் இராணுவ ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.

1985 – சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.

1987 – பனிப்போர்: நடுத்தர-வீச்சு அணுவாயுதங்கள் தொடர்பான உடன்பாட்டில் அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்டு ரேகனும் சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவும் வெள்ளை மாளிகையில் கையெழுத்திட்டனர்.

1987 – பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.

1988 – ஐக்கிய அமெரிக்க வான்படையின் ஏ-10 தண்டபோல்ட் 2 விமானம் செருமனியில் குடிமனைப் பகுதியில் வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.

1991 – சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதெனவும், விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் என்ற அமைப்பை உருவாக்குவதெனவும் உருசியா, பெலருஸ், உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.

1998 – அல்சீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 – தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம் உருவானது.

2010 – எசுபேசுஎக்சு என்ற தனியார் நிறுவனம் பால்கன் 9 விண்கலத்தை இரண்டாவது தடவையும், டிராகன் விண்கலத்தை முதலாவது முறையும் விண்வெளிக்கு ஏவியது.

2010 – சப்பானின் கார்க்கோசு விண்கலம் வெள்ளி கோளை 80,800 கிமீ தூரத்தில் கடந்தது.

2013 – லிட்டில் இந்தியா கலவரம்: சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நிகழ்ந்த விபத்தை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.

இன்றைய தின பிறப்புகள்

கிமு 65 – ஓராசு, உரோமைப் போர்வீரர், கவிஞர் (இ. கிமு 8)1542 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587)

1883 – ஆத்மானந்தர், இந்தியத் துறவி, யோகி (இ. 1959)

1943 – ஜிம் மோரிசன், அமெரிக்கப் பாடகர், கவிஞர் (இ. 1971)

1944 – சசிகுமார், தமிழ்த் திரைப்பட நடிகர், இராணுவ வீரர் (இ. 1974)

1946 – சர்மிளா தாகூர், இந்தியத் திரைப்பட நடிகை

1947 – மார்கரெட் கெல்லர், அமெரிக்க வானியலாளர்

1947 – கங்கை அமரன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர்

1948 – கான்சுடன்சு டோம் நோகுசி, சீன-அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்

1950 – செ. பெருமாள், தமிழக அரசியல்வாதி (இ. 2013)

1953 – மனோபாலா, தமிழகத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்

1959 – ஜிம் யோங் கிம், கொரிய அமெரிக்க மருத்துவர்

1960 – லிம் குவான் எங், மலேசிய அரசியல்வாதி

1966 – டைலர் மானே, கனடிய நடிகர்

1968 – சிவஞானம் சிறீதரன், இலங்கை அரசியல்வாதி

1976 – நிருபமா வைத்தியநாதன், இந்திய டென்னிசு வீராங்கனை

1978 – இயன் சோமர்ஹால்டர், அமெரிக்க நடிகர்.

1982 – நிக்கி மினாஜ், அமெரிக்க நடிகை

இன்றைய தின இறப்புகள்

1818 – யோகான் கோட்லீப் கான், சுவீடன் வேதியியலாளர் (பி. 1745)1864 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1815)

1903 – எர்பெர்ட் இஸ்பென்சர், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1820)

1978 – கோல்டா மேயர், இசுரேலின் 4வது பிரதமர் (பி. 1898)

1980 – ஜான் லெனன், ஆங்கிலேயப் பாடகர் (பி. 1940)

1982 – தேவன் யாழ்ப்பாணம், ஈழத்து எழுத்தாளர், பேச்சாளர் (பி. 1924)

1992 – தோப்பில் பாசி, மலையாள நாடக, திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் (பி. 1924)

1995 – எஸ். அகஸ்தியர், ஈழத்து எழுத்தாளர் (பி. 1926)

2002 – கு. இராமலிங்கம், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1922)

2014 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (பி. 1927)

2014 – மாங்கோ, இத்தாலிய பாடகர், இசைக் கலைஞர் (பி. 1954)

இன்றைய தின சிறப்பு நாள்

மரியாவின் அமல உற்பவம் விழாஅன்னையர் நாள் (பனாமா)


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.