10க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி.
கடும் குளிரால் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவருக்கு உரித்தான பண்ணையில் இருந்த கால்நடைகள் உயிரிழந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் அவற்றை மீட்டு தீ மூட்டி உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும் அயலவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் குறித்த பண்ணையாளருக்கு பல லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் இடம் பெற்ற பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.