உலகில் ஊழல் நிறைந்த 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று!

உலகில் ஊழல் நிறைந்த 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பிரசாரத்தின் கீழ் குருணாகல் மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இளைஞர்களின் தலைமை அவசியம்

நாட்டை முன்னேற்ற இளைஞர்களின் தலைமை அவசியம் என்றும் அரகலய என்ற போராட்டத்தின் செய்த புரட்சியை ஒரு போதும் மறக்கமுடியாது என்றும் அவர் கூறினார்.

அந்த இளைஞர் போராட்டம் இலங்கையில் ஒரு முக்கியமான மற்றும் மதிப்புமிக்க முன்னேற்றம், அத்துடன் ஒரு வரலாற்று நிகழ்வு என்றும் அவர் சுட்டிக்காட்டினார் எனினும் புரட்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வை மக்கள் மத்தியில் இருந்து மறக்கடிக்க பலர் முயற்சிக்கின்றனர்.

70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளும் பொது மக்களை ஏமாற்றிவிட்டன என்பதை போராட்டத்தின் மூலம், சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் நிராகரிக்கின்றனர்.

அதேநேரம் புதிய தலைமையும் புதிய தத்துவமும் வேண்டும் என்பதாகும் என அவர் குறிப்பிட்டார். நாட்டில் எப்போதும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.

எனினும் இன்று ஐக்கிய தேசியக் கட்சி, ரணில், சஜித் பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இன்று கட்சி ஆறாக பிளவுபட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அந்தக்கட்சியை அழித்த நிலையில் எஞ்சியிருந்த அனைத்தையும் சிறிசேன அழித்துவிட்டார் என்றும் சந்திரிக்கா இதன்போது மேலும் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.