15 வயது சிறுமி துஷ்பிரயோகம்- தனியார் வகுப்பாசிரியர் கைது.

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பன்னல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான 24 வயதுடைய ஆசிரியரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் குளியாபிட்டிய நீதவான் ரந்திக லக்மால் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் தங்கொடுவ, வென்னபுவ, மாகந்துர போன்ற பல பிரதேசங்களில் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் ஆவார்.

பன்னல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரிடம் இருந்து பல கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட வட்ஸ்அப் குழுவில் குறித்த சிறுமியின் தொலைபேசி இலக்கத்தை இந்த ஆசிரியர் கண்டுபிடித்து அதன் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய குறித்த ஆசிரியர் சிறுமியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் கைது செய்யப்படும் போது பிறிதொரு வகுப்பில் கற்பித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, சந்தேகத்திற்குரிய ஆசிரியரிடம் படித்த ஏனைய மாணவர்கள் குறித்து விசாரித்து உண்மைகளை தெரிவிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.