வேகமாகச் செல்லும் பஸ்களை தெரியப்படுத்த 1955 அவசர இலக்கம் அறிமுகம்.
வேகமாக செல்லும் பஸ்கள் மற்றும் பஸ் சாரதிகளின் கவனக்குறைவான செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தற்போது 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு புகார் செய்யலாம்.
சட்டத்தை மீறும் பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையத்தின் (NTC) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயக்கப்படும் பஸ்கள் தொடர்பில் மக்கள் புகார் அளிக்க 24 மணி நேரமும் ஹொட்லைன் வசதி உள்ளது.
புகார் செய்ய விரும்புவோர் இப்போது தங்கள் குறைகளை அனுப்பலாம் மற்றும் NTC பயணிகள் போக்குவரத்தை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கலாம். “பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்க் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எனவே, மக்களின் பாதுகாப்பிற்கு சவால் விடும் எதற்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்துளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.