மின் கட்டண அதிகரிப்பு நிச்சயமாக இடம்பெறும்.
𝑰𝑻𝑴 ✍️ எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
𝑰𝑻𝑴 ✍️ இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,
𝑰𝑻𝑴 ✍️"நிச்சயமாக கட்டண திருத்தம் செய்யப்படும். கட்டண திருத்தத்திற்கு தேவையான சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்ட அதிகாரத்திற்கான உறுதியை சட்டமா அதிபர் வழங்கியுள்ளார்.
𝑰𝑻𝑴 ✍️ குறிப்பாக, அமைச்சரவைக்கு, மின்சக்தி அமைச்சர் என்ற முறையில் எனக்கு, சட்டத்தில் உள்ள அதிகாரத்தின் பிரகாரம் அதற்கு தேவையான சட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
𝑰𝑻𝑴 ✍️ வரும் வாரத்திற்குள் அமைச்சரவைக்கு விரிவான அறிக்கை வரும் என்று நம்புகிறோம், மின் கட்டணம் எப்படி அதிகரிக்க வேண்டும், எந்த முறையில் அதிகரிக்க வேண்டும்? இந்த விடயங்கள் அனைத்தையும் அமைச்சரவைக்கு விரிவான தகவல்களுடன் வழங்குவோம், எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தை நிச்சயமாக அதிகரிப்போம்” என்றார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.