மக்களுக்கு ஆபத்தாக மாறக்கூடிய காற்றின் தரம்.
மாண்டஸ் சூறாவளி காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
இதனால் நாட்டின் சில முக்கிய நகரங்களில் காற்று தரச்சுட்டெண் மோசமான நிலையை அடைந்தது.
பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருகை தர ஆரம்பித்தது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.
இந்நிலையான தற்போது சற்று குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன தரவுகளின் ஊடாக அறியமுடிகிறது.
நாட்டின் முக்கிய நகரங்களின் காற்று தரச்சுட்டெண்ணின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி காற்று தரச்சுட்டெண், யாழ்ப்பாணத்தில் 97 ஆகவும்,தம்புள்ளையில் 86 ஆகவும், கம்பஹாவில் 82 ஆகவும், நீர்கொழும்பில் 78 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 72 ஆகவும், கொழும்பில் 70 ஆகவும், கண்டியில் 70 ஆகவும், இரத்தினபுரியில் 53 ஆகவும், நுவரெலியாவில் 29 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை 101 முதல் 150 வரையிலான காற்றுத் தரச்சுட்டெண், சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினருக்கு ஆரோக்கியமற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.