எரிவாயுவின் விலை குறைகிறது! லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு.
அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இவ்வாறு லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
அத்துடன், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.
விலை அதிகரிப்பிற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4610 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1850 ரூபாவாகும்.
மேலும், புதிய விலை திருத்தத்திற்கு அமைய 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 860 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.