பேக்கரி தொழிலில் அதிகரிக்கும் பிரச்சினைகள்.
பேக்கரி பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் இல்லாததால் பேக்கரி தொழிலில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனை தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை பல்வேறு மட்டங்களில் இருப்பதனால் பிரச்சினைகள் ஏற்படுவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் திரு.கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் மாவின் விலை குறைந்துள்ள போதிலும் பேக்கரி உற்பத்தியாளர்கள் பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பதில் கவனம் செலுத்தாதது வேதனையளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேக்கரி உற்பத்தியாளர்கள் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மாவு தரமற்றது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.