அமைச்சர்களுக்கு இரண்டு வாரம் கால அவகாசம்..! வெளியாகிய அறிவிப்பு.
பல அமைச்சர்களால் அதிக மின்சாரக் கட்டணங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் புதிய செயல்முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிக்கையில், பல அமைச்சர்களால் அதிகளவான மின்சாரக் கட்டணங்கள் தீர்க்கப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு புதிய செயல்முறையொன்று அறிமுகப்படுத்தவுள்ளது.
அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களை காலி செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அந்த காலத்தின் போது அத்தகைய வீடுகளுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை.
இந்த முரண்பாடு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அத்துடன் செலுத்தப்படாத தொகை இலட்சக்கணக்கான ரூபாயாக அதிகரித்துள்ளது.
உத்தியோகபூர்வ இல்லங்களின் செலுத்தப்படாத கட்டணங்கள் மீது மேலதிகமாக வட்டி சேர்க்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.