மரியாதை கொடுங்கள்.
தம்மை விட ஏதோ ஒருவகையில் மூத்தவர்களாக இருப்பவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமான மனிதர்களின் உள்ளங்களில் இயல்பாகவே அமைந்துள்ளது...
தம்மை விட ஏதோ ஒருவகையில் இளையவர்களாக இருப்பவர்கள் தனக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதும் மனிதர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது...
தம்மை விட அகவையில் இளையவர்களாக இருந்தாலும் சரி, அல்லது மூத்தவர்களாக இருந்தாலும் சரி, தன் கீழ்நிலைப் பணியாளர்களாக இருந்தாலும் சரி உரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தல் வேண்டும்...
அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம்; குணம் தான் மரியாதையைப் பெற்றுக் கொடுக்கும்’ மறைந்த நடிகர் புரூஸ் லீ கூறிய வைர வாக்கியம் இது...
இயல்பாகவே நல்ல குணமுள்ள மனிதர்களுக்கு அவர்களுக்கான மரியாதை தானாகவே கிடைத்து விடும்...
இது ஒருபுறம் இருக்கட்டும்.,
மரியாதை என்பது ஒருவழிப் பாதையல்ல!, இருவழிப்பாதை. அதாவது கொடுத்துப் பெறுவது. கேட்டுப் பெறுவதல்ல. இது புரிந்து விட்டால் சிக்கல்களே இல்லை...
உறவுகள் உறுதியாக இருப்பதற்கான அடிப்படையே ஒருவருக்கொருவர் கொடுக்கும் நம்பிக்கையும், மரியாதையும் தான்...
ஒருவருக்கு மற்றொருவர் மரியாதை கொடுக்கத் தவறுவது கூட விரிசலுக்குக் காரணமாகலாம். இது கணவன் - மனைவி உறவுக்குக் கூடப் பொருந்தும்...
முதலில் உன்னை மதிக்கக் கற்றுக் கொள். அப்போது தான் மற்றவர்களும் உன்னை மதிப்பார்கள்’ என்பது கன்ஃப்யூஷியஸின் பொன்மொழி...!
தன்னை உணர்ந்தவர் கௌரவம் பார்க்க மாட்டார் ; யாரிடமும் தனக்கான மரியாதையைக் கேட்டுப் பெறவும் மாட்டார்...
ஆம் நண்பர்களே...!
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தன்னை விடக் கீழ் நிலையில் உள்ளவர் என்று தரக்குறைவாக எண்ணாமல் ஒருவருக்கொருவர் மரியாதை (அன்பு) செலுத்திக் கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்...!
சுயநலமில்லாத இந்தப் பழக்கம் மற்றவர்களிடத்து பெரிதும் விரும்பச் செய்யும்...!
ஒருவருடைய மனதைப் புண்படுத்தாத, நல்ல குணங்கள் உள்ளவர்களை அதிகம் விரும்புவார்கள் என்பதில் அய்யமில்லை...
உடுமலை சு. தண்டபாணி
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.