டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
இம்மாதத்தின் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 3,200 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில், கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, கொழும்பு, களுத்துறை, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
எனினும், நவம்பர் மாதத்தில் 5,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 71,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.