வட்ஸ்அப் கொண்டுவரும் புதிய வசதி
பயனர்களின் பயன்பாட்டிற்காக புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வட்ஸ்அப் செயலிக்கு உலகம் முழுவதும் பல கோடி பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வட்ஸ்அப் செயலி அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.
அதன்படி பயனர்களின் உபயோகத்திற்காக புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த முறை வெளியான புதிய வசதியான தனக்கு தானே செய்தி அனுப்பிக் கொள்ளும் முறையை தற்போது கணினி பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை ஒருமுறை மட்டுமே வாசிக்கும் வகையிலான புதிய அம்சமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.