முட்டைக்கான புதிய விலை இதோ; நீதிமன்றம் தடை!
முட்டைக்கான புதிய விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி வெள்ளை முட்டை ஒன்றுக்கு 42 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 44 ரூபாவும் வழங்க நுகர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதேவேளை முட்டை உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குஹேரட சொய்சா, அந்த விலைக்கு உடன்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதோடு வர்த்தமானி அறிவிப்பில் தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலைகளை விட புதிய விலைகள் குறைந்துள்ளதாகவும் அதனை திருப்தியடைய முடியாது எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, மனுவை விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கோரினார்.
அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கை வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி விசாரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அத்துடன், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை விசாரணை முடியும் வரை இடைநிறுத்தியும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.