மேலும் அதிகரித்த முக்கிய பொருளின் விலை.
உள்ளுர் சந்தையில் தேங்காயின் விலை 9.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம்மாதம் நடைபெற்ற இரண்டாவது தேங்காய் ஏலத்தில் ஆயிரம் தேங்காய்களின் விலை எழுபத்தாறாயிரத்து நானூற்று முப்பத்தெட்டு (76,438) ரூபாவாக அதிகரித்துள்ளதாக அந்த அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய ஏலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அதன் விலை அறுபத்து ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஐந்து (69,975).
722 163 தேங்காய்கள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன அதில் 547 365 தேங்காய்கள் விற்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் மொத்த தேங்காய் ஏற்றுமதி நான்கு வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.