இன்று முதல் மீண்டும் ஆரம்பம்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அதற்கான கொடுப்பனவுகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், சுத்திகரிப்பு நிலையத்தின் தொட்டி வளாகத்திற்கு கச்சா எண்ணெய் இறக்கும் பணியும் தொடங்கியுள்ளது.
எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலையான உற்பத்தியைப் பேணுவதற்காக மேலும் 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்குத் தேவையான கொள்முதல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை முழு வீச்சில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.