கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவித்தல்.
தரம் - 1 மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்குவது அமைச்சின் ஊடாக அல்லாமல் அந்தந்த பாடசாலைகளினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று விசேட அறிக்கை ஒன்றின் மூலம் கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர கற்கைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தாம் விண்ணப்பிக்கும் பாடப்பிரிவை கொண்டிராத பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்களின் விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்.
மாறாக அவற்றை கல்வி அமைச்சுக்கு அனுப்பக்கூடாது.
இடைநடுவே வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை 2022ஆம் ஆண்டின் 3ஆம் தவணை ஆரம்பமான டிசம்பர் 5ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
2023 மார்ச் 24ஆம் திகதியன்று 2022ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை முடிவடைந்த பின்னரே பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து 2023ஆம் ஆண்டில் இடைநடுவே வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” - என்றுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.