காற்று மாசு தரக்குறியீட்டின் பிரகாரம் முதல் மூன்று இடங்களில் உள்ள மாவட்டங்கள்.
இலங்கையில் காற்றில் தூசியின் அளவு அதிகரித்து, மாசடைந்த மாவட்டங்களில் புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
இலங்கையின் முக்கிய நகர்ப்புறங்களில் சுற்றுப்புற காற்றின் தர நிலை தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இன்று காலை விடுத்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று மாசு தரக்குறியீட்டின் பிரகாரம், 24 மணி நேரத்தில் இருக்கக்கூடிய தூசு துகள்களின் அளவு ஒரு கன மீட்டரில் இருக்கக்கூடிய 50 மைக்ரோகிராம் அளவு ஆகும்.
இலங்கையின் மூன்று மாவட்டங்கள் காற்று தரக்குறியீட்டில் ஆரோக்கியமற்ற எச்சரிக்கை நிலையான சிவப்பு நிற தரக்குறியீட்டை கொண்டுள்ளன.
புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களே ஆரோக்கியமற்ற எச்சரிக்கை நிலையை வௌிப்படுத்தியுள்ளன.
இதன் பிரகாரம், புத்தளத்தில் காற்று மாசு தரக்குறியீடு 174 ஆக காணப்படுவதுடன், யாழ்ப்பாணத்தில் 171 ஆகவும் பதுளையில் 160 ஆகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு ஆரோக்கியமற்ற சிவப்பு எச்சரிக்கை நிலையின்போது, மனிதர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதுடன், நோய்வாய்ப்படுவோருக்கு கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகரான கொழும்பில் காற்று மாசு தரக்குறியீடு 134 ஆக காணப்படுவதுடன், இது சுகதேகிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் நோய்வாய்ப்படக்கூடியவர்களே அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்றில் தூசின் அளவு அதிகரிக்கும்போது, அது குறித்து விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.