மட்டக்களப்பில் பிரபல பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி நெச்சிமுனை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லடி நெச்சிமுனையைச் சேர்ந்த பிரபல வைத்தியர் ஒருவரின் மகனான அகிலன் துஷ்யந்தன் (18) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்தவராவார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயிரியல் துறையில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவன் தனது வீட்டில் வளர்க்கும் நாயை அடித்ததனால் அதனை கேட்டு அவரின் தந்தை திட்டியதாகவும், அதனையடுத்து மனமுடைந்த மாணவன் கடந்த 5ஆம் திகதி தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள சமையலறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவத்தைக்கண்டு தூக்கில் இருந்து மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் (05) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலதிக விசாணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.