காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் இவைதான் – அடுத்தக்கட்ட போட்டிகள் குறித்த விபரம் இதோ

 

கட்டாரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கிய உலகக்கிண்ண உதைபந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.

லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நொக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு நுழையும். நெதர்லாந்து , செனகல் (குழு- ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (குழு- பி), அர்ஜென்டினா, போலந்து (குழு- சி), பிரான்ஸ், அவுஸ்திரேலியா (குழு- டி), ஜப்பான், ஸ்பெயின், (குழு- இ), மொராக்கோ , குரோஷியா (குழு- எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (குழு- ஜி), போர்த்துக்கல், தென் கொரியா (குழு- எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், நொக் அவுட் சுற்றுகள் நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில்,. நொக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்த்துக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

நாளை மறுதினம் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் குரோசியா, பிரேசில் அணிகள் மோதுகின்றன.

அத்தொடு டிசம்பர் 10 ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2 ஆவது காலிறுதியில் மொராக்கோ, போர்த்துக்கல் அணியும், நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 3 ஆவது காலிறுதியில் நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகளும் மோதுகின்றன.

நான்காவது காலிறுதி டிசம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.