உலகில் குள்ளமான மனிதர் இவர்தான்... கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பு.
உலகின் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர்.
உலகின் குள்ளமான மனிதர்
உலகில் வாழும் மனிதர்களில் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள Afshin Esmaeil Ghaderzadeh (20), ஈரானிலுள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர்.
அவரது உயரம் 2அடி ஒரு அங்குலம், அதாவது 65.24 சென்றிமீற்றர்கள்.
இதற்கு முன் உலகின் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த கொலம்பியாவைச் சேர்ந்த Edward 'Niño' Hernandez (36) என்னும் நபரைவிட Afshin 7 சென்றிமீற்றர் உயரம் குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் குள்ளமான மனிதரின் ஆசை
தன் பெற்றோருக்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதுதான் Afshinஉடைய ஆசையாம். தான் உலகின் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விடயத்தால் தனக்குக் கிடைக்க இருக்கும் புகழ், தனது குடும்பத்துக்கு உதவ தனக்கு உதவியாக இருக்கும் என்கிறார் அவர்.
காரணம், Afshinக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. சில நேரங்களில் அவரது சிகிச்சைக்கு செலவு செய்வதற்கு பணம் இல்லாமல் அவரது பெற்றோர் கஷ்டப்படுகிறார்கள்.
20 வயதாகும் Afshinக்கு ஒரு மொபைல் போனை சுமப்பதுகூட கஷ்டம்தான் என்றாலும் அவரால் தானாகவே நடமாட முடியும். என்றாலும், எங்கு சென்றாலும் அவரது பெற்றோர்களில் ஒருவர் அவரை தூக்கிக்கொண்டுதான் நடக்கிறார். எத்தனை வயதானாலும் பெற்றோருக்குப் பிள்ளைதானே!
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.