Google Chrome பயன்படுத்துவோருக்கு ஒரு சூப்பரான தகவல்! புது வசதி வந்தாச்சு
கூகுள் குரோம் பயனர்களுக்கு புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
📌 பாஸ் கீஸ் (passkeys)
அதன்படி, குரோம் பயனர்களுக்கு ‘பாஸ் கீஸ்’ அம்சம் அறிமுகப்படுகிறது. அக்டோபரில் இதன் சோதனை தொடங்கிய நிலையில், தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது பாஸ்வேர்டு பயன்படுத்துவதற்கு பதிலாக பாஸ் கீ அம்சம் கொண்டுவரப்படுகிறது. விண்டோஸ் 11, ஆப்பின் மேக், ஆண்ட்ராய்டு மொபைல் போன்களிலும் பயன்படுத்தலாம்.
📌 கைரேகை
பாஸ் கீஸ் பயோமெட்ரிக்ஸ், கைரேகை என எதுவாக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
பயனர்கள் பயோமெட்ரிக் சென்சார் (fingerprint or facial recognition), PIN அல்லது பேட்டர்ன் (pattern) மூலம் பாஸ் கீஸ் செட் செய்து கொள்ளலாம். பாஸ்வேர்டை விட பாஸ் கீஸ் சிறந்ததாகக் கூறப்படுகிறது. பயோமெட்ரிக்ஸ் மூலம் பாஸ் கீகள் அமைக்கப்படுவதால், பாஸ்வேர்டுகள் ஹேக் செய்வதை தடுக்க முடியும்.
எப்போதும் போலவே பிற சாதனங்களில் கூகுள் லாக்கின் செய்யும் போது பாஸ்வேர்டு கேட்கும். அதுபோவே தான் பாஸ் கீஸ் பயன்பாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.