LPL 2022 - Jaffna Kings அணி வெற்றி!
இன்று ஆரம்பமான 2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் Jaffna Kings அணி 24 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
Galle Gladiators அணிக்கும் Jaffna Kings அணிக்கும் இடையில் முதலாவது போட்டி இன்று இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Galle Gladiators அணி முதலில் துடுப்பெடுத்தாட Jaffna Kings அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் சொய்ப் மலிக் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
தனஞ்ச டி சில்வா 29 ஓட்டங்களையும், திசர பெரேரா 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் வஹாப் ரிஹாஸ், ஹிமத் வசீம், நுவான் துஷார, நுவான் பிரதீப் மற்றும் இப்திஹர் அஹமட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதன்படி, 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
Gladiators அணி சார்பில் குசல் மெந்திஸ் அதிகப்பட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் பினுர பெர்ணான்டோ மூன்று விக்கெட்டுக்களையும், விஜயகாந்த வியாஸ்காந்த் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
2014 ஆம் ஆண்டு Dialog TV மற்றும் Peo TV அலைவரிசை எண் 14 இல் மட்டும் ஒளிபரப்பு செய்யத் தொடங்கிய "Ada Derana 24" தொலைக்காட்சி அலைவரிசையை தற்போது சாதாரண தொலைக்காட்சியிலும் கண்டு மகிழலாம்.
அதன்படி, கொழும்பில் இருந்து UHF 26, தெனியாவில் இருந்து UHF 35, கண்டியில் இருந்து UHF 28 மற்றும் மாத்தளையில் இருந்து UHF 35 ஆகியவற்றிலிருந்து "அத தெரண 24" தொலைக்காட்சி அலைவரிசையை காண முடியும்.
அதேசமயம், இன்று முதல் LPL போட்டித் தொடரின் அனைத்து போட்டிகளையும் அத தெரண யூடியூப் ஊடாகவும் பார்க்கலாம்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.