ஒரு அன்னாசிப் பழத்தின் விலை 1,000 பவுண்டு!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஒரு அன்னாசிப் பழத்தின் விலை 1,000 பவுண்டு விற்பனை செய்யப்படுவதாக வியப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்,மாங்கனீஸ், பொட்டாஷியம் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன.

இது, உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த பழமாக திகழ்கிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் இதை உண்ணும்போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த அன்னாசிப் பழத்தின் வகைகளில் உலகின் மிக விலை உயர்ந்ததாக லண்டனில் கான்வால் தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஹெலிகான் அன்னாசிப்பழம் உள்ளது.

இதன் ஒன்றின் விலை 1,000 பவுண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. ஹெலிகான் அன்னாசிப்பழம் 1819ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக பிரித்தானியாவுக்கு கொண்டு வரப்பட்டது.

இருப்பினும், தோட்டக்கலை வல்லுநர்கள் நாட்டின் தட்பவெப்பநிலை அன்னாசி பயிரிட ஏற்றபடி இல்லை என்பதை உணர்ந்திருந்தனர்.

இதனால், அவர்கள் அவற்றை பயிர் செய்வதற்கான பிரத்யேக வழிமுறைகளை உரு வாக்கினர். இதற்கான செலவினம் அதிகம் என்பதால் ஒவ்வொரு அன்னாசிப்பழமும் 4 லட்சம் விலை (1000 பவுண்டுகள்) பெறுகிறது.

மேலும், இவற்றை பொதுவில் ஏலம் விடும்பட்சத்தில் ஒவ்வொரு அன்னாசி பழமும் ரூ.10 லட்சம் வரை விலை போகும் என்று ஹெலிகன் தோட்டத்தின் செய்தித் தொடர்பாளர் ஊடகம் ஒன்றிடம் கூறினார்.

விக்டோரியன் கிரீன்ஹவுஸில் விளைவிக்கப்பட்ட 2வது அன்னாச்சி பழத்தை ராணி இரண்டாம் எலிசபெத் பரிசாகப் பெற்றதாக ஹெலிகன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.