ஜனவரி 15 முதல் மின்கட்டணம் அதிகரிப்பு.

அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் தொடர்பிலான தரவுகளை ஒரு மாதத்திற்குள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பொறியியலாளர் ரோஹான் செனவிரத்ன தெரிவித்தார். 

அமைச்சரவை வழங்கிய அனுமதியின் பிரகாரம், ஜனவரி 15 ஆம் திகதி முதல் வீட்டுப் பாவனை மின்சார அலகிற்கான நிலையான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், 0 -30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

31-60 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 240 ரூபாவிலிருந்து 550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

60-90 அலகுகளுக்கான நிலையான கட்டணமும் 90-180 அலகுகள் வரையான நிலையான கட்டணமும் முறையே 650 ரூபாவாகவும் 1500 ரூபாவாகவும் அமைந்துள்ளது.

180 அலகுகளுக்கு மேல் 1500 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 2000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மத வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

புதிய கட்டண விபரம்

👉அலகுகள் 0 - 30 

புதிய கட்டணம் - 30

புதிய நிலையான கட்டணம் - 400

👉அலகுகள் 31 - 60

புதிய கட்டணம் - 37

புதிய நிலையான கட்டணம் - 550

👉அலகுகள் 61 - 90 

புதிய கட்டணம் - 42

புதிய நிலையான கட்டணம் - 650

👉அலகுகள் 91 - 180

புதிய கட்டணம் - 50

புதிய நிலையான கட்டணம் - 1500

👉181 மேல்

புதிய கட்டணம் - 75

புதிய நிலையான கட்டணம் - 2000

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.