வரலாற்றில் இன்று ஜனவரி 16.2023

சனவரி 16  கிரிகோரியன் ஆண்டின் 16 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 349 (நெட்டாண்டுகளில் 350) நாட்கள் உள்ளன.

❇️ இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 27 – கையஸ் யூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் அகுஸ்டசு என்ற மரபுப் பெயரைப் பெற்றார். இது உரோமைப் பேரரசின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.

929 – குர்துபா கலீபகம் அமைக்கப்பட்டது.

1362 – வடகடலில் ஏற்பட்ட பெரும் சூறாவளியால் இங்கிலாந்தின் கிழக்குக் கரை பெரும் சேதத்திற்குள்ளானது. ருங்கோல்ட் என்ற செருமனிய நகரம் அழிந்தது.

1492 – எசுப்பானிய மொழியின் முதலாவது இலக்கண நூல் பேரரசி முதலாம் இசபெல்லாவிடம்]] கையளிக்கப்பட்டது.

1547 – இளவரசர் நான்காம் இவான் உருசியாவின் 1-வது (சார்) பேரரசராக முடிசூடினார். 264-ஆண்டு கால மாசுக்கோ தன்னாட்சிப் பிரதேசம் உருசிய சாராட்சியாக மாறியது.

1556 – இரண்டாம் பிலிப்பு எசுப்பானியாவின் அரசராக முடிசூடினார்.

1572 – இங்கிலாந்தில் கத்தோலிக்க திருச்சபையை மீளக் கொண்டுவருவதற்கு சதியில் ஈடுபட்டமைக்காக நோர்போக் கோமகன் தொதாம்சு ஓவார்டு மீது விசாரணை ஆரம்பமானது.

1707 – இசுக்காட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து பெரிய பிரித்தானிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

1757 – நரேலா சமரில் மராட்டியப் பேரரசுப் படைகள் 5-000 படைகளைக் கொண்ட துராணிப் பேரரசைத் தோற்கடித்தது.[1]

1761 – பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.

1777 – வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1862 – இங்கிலாந்து, நோர்தம்பலாந்து என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 204 பேர் உயிரிழந்தனர்.

1900 – சமோவா தீவுகளுக்கான உரிமையை விட்டுக் கொடுக்கும் ஐக்கிய இராச்சியத்தின் 1899 ஆங்கிலோ-செருமன் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.

1909 – ஏர்னஸ்ட் சாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.

1920 – உலக நாடுகள் சங்கத்தின் முதலாவது கூட்டம் பாரிசில் நடைபெற்றது.

1942 – அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் நடிகை கரோல் லம்பார்டு உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.

1945 – இட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.

1969 – செக்கோசிலோவாக்கியாவில் சோவியத் இராணுவம் முதல் வருடத்தில் மாணவர் எழுச்சியை அடக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யான் பலாக்கு என்ற செக் மாணவர் பிராகாவில் தீக்குளித்து மாண்டார்.

1969 – சோவியத் விண்கலங்கள் சோயுசு 4, சோயுசு 5 விண்கலங்கள் முதல் தடவையாக புவியின் சுற்றுப்பாதையில் விண்வெளிவீரர்களைப் பரிமாறிக் கொண்டன.

1979 – ஈரான் கடைசி மன்னர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.

1991 – ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது. வளைகுடாப் போர் ஆரம்பமானது.

1992 – எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

1993 – விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.

2001 – கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2003 – கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.

2006 – எலன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியாவின் அரசுத்தலைவரானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.

2008 – 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.

2008 – இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.

2016 – புர்க்கினா பாசோவில் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

❇️ இன்றைய தின பிறப்புகள்

1630 – குரு ஹர் ராய், சீக்கிய குரு (இ. 1661)

1890 – டபிள்யூ. ஏ. சில்வா, சிங்களப் புதின எழுத்தாளர் (இ. 1957)

1895 – த. மு. சபாரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 1966)

1901 – புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா, கியூபாவின் 9வது அரசுத்தலைவர் (இ. 1973)

1920 – நானி பல்கிவாலா, இந்திய அரசியல்சட்ட நிபுணர், பொருளியல் அறிஞர், கல்வியாளர் (இ. 2002)

1929 – எஸ். ஜே. தம்பையா, இலங்கை மானுடவியலாளர், கல்வியாளர் (இ. 2014)

1932 – டயேன் ஃபாசி, அமெரிக்க விலங்கியலாளர் (இ. 1985)

1944 – ஜில் டார்ட்டர், அமெரிக்க வானியலாளர், உயிரியலாளர்

1946 – கபீர் பேடி, இந்திய நடிகர்.

1952 – நெல்லை சிவா, தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (இ. 2021)

1974 – கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர்

1978 – விஜய் சேதுபதி, தமிழ்த் திரைப்பட நடிகர்

1979 – ஆலியா, அமெரிக்கப் பாடகி, நடிகை (இ. 2001)

1985 – சித்தார்த் மல்ஹோத்ரா, இந்திய நடிகர்.

❇️ இன்றைய தின இறப்புகள்

309 – முதலாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை), உரோமை ஆயர் (பி. 255)

1656 – தத்துவ போதகர், இத்தாலிய இயேசு சபைப் போதகர் (பி. 1577)

1711 – யோசப் வாசு, இந்திய-இலங்கை கத்தோலிக்க மதகுரு, புனிதர் (பி. 1651)

1794 – எட்வார்ட் கிப்பன், ஆங்கிலேய வரலாற்றாளர், அரசியல்வாதி (பி. 1737)

1938 – சரத்சந்திர சட்டோபாத்யாயா இந்திய எழுத்தாளர் (பி. 1876)

1938 – வில்லியம் என்றி பிக்கெரிங், அமெரிக்க வானியலாளர் (பி. 1858)

1943 – திரிபுரனேனி இராமசாமி, ஆந்திர வழக்கறிஞர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதி (பி. 1887)

1967 – ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)

1978 – ஏ. பீம்சிங், தமிழக இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் (பி. 1924)

1993 – கேணல் கிட்டு, விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர், தளபதி (பி. 1961)

1997 – ராஜகோபால தொண்டைமான், புதுகோட்டை சமத்தானத்தின் 9-வது, கடைசி ஆட்சியாளர் (பி. 1922)

2006 – பி. சாந்தகுமாரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1920)

2006 – தாத்தேயசு அகேகியான், சோவியத்-ஆர்மேனிய வானியற்பியலாளர் (பி. 1913)

2010 – ஜோதி பாசு, மேற்கு வங்கத்தின் 9வது முதலமைச்சர் (பி. 1914)

2014 – ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவத் தளபதி (பி. 1922)

2014 – சிவயோகமலர் ஜெயக்குமார், ஈழத்து எழுத்தாளர்

2016 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உச்சநீதிமன்ற நீதிபதி (பி. 1930)

2017 – சி. வி. விசுவேசுவரா, இந்திய அறிவியலாளர், கருந்துளை ஆய்வாளர், வானியலாளர் (பி. 1938)

❇️ இன்றைய தின சிறப்பு நாள்

தேசிய சமய சமத்துவ நாள் (அமெரிக்கா)

ஆசிரியர் நாள் (தாய்லாந்து, பர்மா)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.