இலங்கை- இந்தியா- 2வது ஒரு நாள் போட்டி இன்று.

இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க போட்டியில் இந்தியா 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்குமிடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு போட்டியாக இடம்பெறவுள்ளது..

முதல் போட்டியில் இந்திய அணி விராட்கோலியின் சதம் மற்றும் சுப்மான் கில், ரோகித் சர்மா ஆகியோரது அரைசதத்தால் 373 ஓட்டங்களை திரட்டி மலைக்க வைத்தது. பந்துவீச்சில் தொடக்கத்தில் மிரட்டிய இந்திய வீரர்கள் கடைசி கட்டத்தில் கோட்டை விட்டனர். இதனால் தான் இலங்கை அணியால் 300 ஓட்டங்களை கடக்க முடிந்தது. எனவே பந்துவீச்சில் கூடுதல் கவனம் அவசியமாகும்.

சாதனையின் விளிம்பில் இருக்கும் விராட்கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் ஒரு அணிக்கு எதிராக 10 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். 

ரோகித் சர்மா இதே மைதானத்தில் 8 ஆண்டுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக 264 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியதை மறந்து விட முடியாது. இதே போன்ற ஒரு ருத்ரதாண்டவ இன்னிங்சை ரோகித் சர்மா காட்டுவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

இலங்கை அணியை எடுத்துக் கொண்டால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை கைப்பற்றுவ தற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். முதல் பொட்டியில் அணி தலைவர் தசுன் ஷனகவின் அதிரடியான செஞ்சுரியும், பெதும் நிசாங்கவின் 72 ஓட்ட சேர்ப்பும் இலங்கைக்கு ஆறுதல் தந்தது. பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பிலும் கச்சிதமாக செயல்பட்டால் இதை விட பலமாக இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம். இல்லாவிட்டால் சரிவில் இருந்து மீள்வது கடினம் தான்.

கவுகாத்தி போட்டியில் வலது தோள்பட்டையில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் மதுஷன்க இன்றைய போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. மற்றபடி அந்த அணியில் மாற்றம் இருக்காது.

புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 12-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை. 

இலங்கை அணி இங்கு 8 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கு ஒரு நாள் போட்டி நடந்தது. அதில் 252 ஓட்டங்கள் எடுத்த இந்தியா அவுஸ்திரேலியாவை 202 ஓட்டங்களில் கட்டுப்படுத்தி வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு.

❇️ இந்தியா

0️⃣1️⃣ரோகித் சர்மா (தலைவர்), 

0️⃣2️⃣சுப்மான் கில், 

0️⃣3️⃣விராட் கோலி, 

0️⃣4️⃣ஸ்ரேயாஸ் அய்யர், 

0️⃣5️⃣லோகேஷ் ராகுல், 

0️⃣6️⃣ஹர்திக் பாண்ட்யா, 

0️⃣7️⃣அக்ஷர் பட்டேல், 

0️⃣8️⃣முகமது ஷமி, 

0️⃣9️⃣முகமது சிராஜ், 

1️⃣0️⃣உம்ரான் மாலிக், 

1️⃣1️⃣யுஸ்வேந்திர சாஹல்.

❇️இலங்கை

0️⃣1️⃣தசுன் ஷனக (தலைவர்), 

0️⃣2️⃣பெதும் நிசாங்க, 

0️⃣3️⃣அவிஷ்க பெர்னாண்டோ, 

0️⃣4️⃣குசல் மென்டிஸ், 

0️⃣5️⃣சரித் அசலங்க, 

0️⃣6️⃣தனஞ்ஜெய டி சில்வா, 

0️⃣7️⃣ஹசரங்க, 

0️⃣8️⃣வெல்லாலகே, 

0️⃣9️⃣சமிக கருணாரத்ன, 

1️⃣0️⃣கசுன் ரஜித, 

1️⃣1️⃣மதுஷன்க அல்லது லாஹிரு குமார.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.