பால் குடிக்கும் முன் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! பெரிய பிரச்சனையை ஏற்படுத்துமாம்.

பொதுவாக நம்மில் அனைவருக்குமே பால் குடிக்கும் பழக்கம் உள்ளது.

ஆனால் பாலைக் குடிக்கும் முன் ஒருசில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, பால் குடிக்கும் முன் ஒருசில உணவுகளை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் ஒருசில உணவுகளை உட்கொண்டதும் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இல்லாவிட்டால், அது உடலுக்கு நன்மை விளைவிப்பதை விட தீங்கையே உண்டாக்கும். அந்தவகையில் இப்போது எந்த உணவுகளை உண்ட பின் பால் குடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.       

சிட்ரஸ் பழங்களை பால் குடிக்கும் முன் சாப்பிடக்கூடாது. னெனில் இந்த பழங்களை உட்கொண்டதும் பாலை குடித்தால், பாலில் உள்ள கால்சியம் பழங்களில் உள்ள நொதிகளால் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கப் பெறாமல் போகும். இது தவிர, இது செரிமானத்தை பாதித்து, அஜீரண கோளாறை உண்டாக்கும்.

 உளுத்தம் பருப்பால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டதும் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை செரிமான செயல்முறையை பாழாக்கும். குறிப்பாக அடிவயிற்று வலி, வாந்தி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். 

வெண்டைக்காய் மற்றும் பாகற்காய் உணவுகளை உட்கொண்டதும் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது முகத்தில் மற்றும் சருமத்தில் கரும்புள்ளிகளை உண்டாக்கும். 

முள்ளங்கி சாம்பார் மற்றும் பெர்ரி பழங்களை சாப்பிட்டிருந்தால், உடனே பால் குடித்துவிடாதீர்கள். ஏனெனில் இந்த இரண்டையும் உட்கொண்டதும் பால் குடித்தால் சரும அரிப்புகள் மற்றும் சரும சுருக்கங்கள் போன்ற சருமம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

மீன் சாப்பிட்டதும் பால் குடிக்கக்கூடாது. இவ்வாறு குடிக்கும் போது, அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீரழித்து, ஃபுட் பாய்சன், அடிவயிற்று வலி மற்றும் சருமத்தில் வெள்ளைப்புள்ளிகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.