பிறந்த குழந்தையைக் கொன்று கழிவறையில் ஒளித்துவைத்த யுவதி!

பிறந்த குழந்தையைக் கொன்று சடலத்தை பையில் போட்டு வீட்டில் உள்ள கழிவறையின் பாத்திரம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த 23 வயதுடைய யுவதியை தெரிபஹ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் வெகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தமக்கு கடுமையான வயிற்றுவலி உள்ளதாகக் கூறி, தெரிபஹ அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் வைத்தியசாலையை விட்டு தப்பியோடியதாய் அடுத்து, சந்தேகமடைந்த மருத்துவர் இது குறித்து அப்பகுதி குடும்ப சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவித்து விசாரணை நடத்துமாறு கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குடும்ப சுகாதார உத்தியோகத்தர் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அப்போது , மலசலகூடத்தில் ஒரு பையில் வைத்து பாத்திரமொன்றில் மறைத்து பெண் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு வைத்தியசாலை வைத்தியர் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்தே சந்தேகத்தின் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக்க போலீசார் கூறியுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.