பெற்றோர்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கை தகவல்

குழந்தைகள் மத்தியில் டெங்கு நோய் அதிகளவில் பரவும் வாய்ப்பு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 40 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுக்கு அனுப்பி சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோரிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

நோய் அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

பெற்றோர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை மிகவும் கடினமான நிலையை அடைந்த பின்னர் வைத்தியசாலையில் சேர்ப்பது மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களாக குழந்தைகளிடையே கண் நோய் பரவி வருவதாகவும், தற்போது நோய் பரவல் சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.