எதையும் ஒத்திப் போடுதல் சரியா...?

இன்றைய வேலைகளிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு எளிமையான வழி ஒத்திப் போடுவது தான். பொதுவாக ஒரு செயலை எப்படிச் செய்வது என்பது தெரியாது என்பதால் ஒத்திப் போடுகிறோம்...

நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாததனால் ஒத்திப் போடுகிறோம்...

நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை காரணமாக ஒத்திப் போடுகிறோம்...

வெற்றி பெற முடியாது என்று எண்ணி ஒத்திப் போடுகிறோம்...

சோம்பலின் காரணமாக ஒத்திப் போடுகிறோம்...

உடலுமும் உள்ளமும் களைப்பாக இருக்கிறது என்பதற்காக ஒத்திப் போடுகிறோம்..

துக்கத்தின் காரணமாக ஒத்திப் போடுகிறோம்...

இப்படியொரு செயலை ஒத்திப் போடப் பல காரணங்களை 

அடுக்கிக் கொண்டே போகலாம். ஒத்திப் போடுவதற்குக் காரணம் தேடும் நாம், நமது வீடு தீப்பற்றிக் கொண்டது என்றால் தீயை அணைப்பதை ஒத்திப் போடுவோமா...?

எந்த முடிவையும் எடுப்பதில்லை என்று முடிவு எடுப்பதை விட, எதாவது ஒரு முடிவை எடுக்கலாம். அது தோல்வியில் முடிந்தால் கூட முயற்சி எடுத்தோம் என்ற அளவிலாவது மகிழ்ச்சியடையலாம்...

சில நேரங்களில் முடிவு எடுக்க முடியாததிற்கு இதுவா...? அதுவா...? இப்படிச் செய்யலாமா...! அல்லது அப்படிச் செய்யலாமா...! என்ற குழப்பமே காரணம்...

ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பதில் ஒரு தயக்கம்

முடிவெடுக்கும் தருணத்தில் ஆலோசிப்பது நாம் செயல்படுவதை தள்ளிப் போட வைக்கிறது...

எடுத்துக்காட்டாக, உங்கள் வாகனத்தை சுத்தம் செய்தல், குளியலறையை சுத்தம் செய்தல், கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்புதல், உடல் நலம் குன்றிய நெருங்கிய நண்பரை சென்று பார்ப்பது என்று நாளும் எதையாவது ஒத்தி வைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்...

நாம் செயல்படுவதில் முன்னுரிமை காரணமாக தள்ளிப் போடுவதாகக் கூறிக் கொண்டாலும், அதற்குப் பிறகு அப்பணியை செய்வதே இல்லை அப்பணியை நிறுத்தியே விடுகிறோம்...

ஆம் நண்பர்களே...!

நாளை என்று எதையும் தள்ளிப் போடாதீர்கள், எந்த ஒரு முடிவும் துணிச்சலாக எடுங்கள்...!

இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். நாளைய வேலையைக் கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள். ஆனால்!, இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்...!!

நாளை என்பது நமதில்லை. நேரம் கிடைப்பதில்லை என்பதல்ல. நம் சோம்பல் தான் காரணம். வெற்றி பெற்றவன் காரணத்தைத் தேடுவதில்லை, காரணத்தைத் தேடுபவன் வெற்றி பெறப் போவதில்லை...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.