மனதிற்கு சமாதானம் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம்.

மற்றவரை கட்டுப்படுத்துவதிலும்

நமக்கு நாமே கட்டுப்பாடுகளை மேற்கொள்வதில் தான் சிக்கி இருக்கிற்றோமே தவிர 

வேறு எந்த காரணத்தினாலும் அல்ல 

மனிதர்களுக்கு பலப்பல வேடங்கள் உண்டு 

கணவனாகவோ, மனைவியாகவோ,

பெற்றோராகவோ, குழந்தைகளாக, முதலாளியாகவோ, தொழிலாளியாகவோ 

இத்தனை வேடங்களில் சுழற்சியுறும் மனிதனால் 

அந்தந்த வேடத்தில் இருக்கும் போது 

அதுவாகவே மாறுவது தவறேதும் இல்லை என்றாலும் 

ஆனால் 

மீண்டும் அதே வேடத்தை பிற இடத்தில் பரிணமிக்காமல் பார்த்துக் கொண்டால் உத்தமம் 

அப்போது எந்த வேடமோ 

அதை மட்டுமே கருத்தில்கொண்டு வாழ்ந்து 

இவை அனைத்தையும் தன்னகப் படுத்திக் கொள்ளாமல் 

சுய உணர்வில் இருந்து கொண்டு 

பார்வையாளராக இருக்கும் நிலையே மிக உயர்ந்த நிலை 

இதுவே மனித அறிவின் உச்சம் 

மற்றும் ஞானத்தின் முடிவும் ஆகும் 

மனம் உடமை உணர்வுகளின் தொகுப்பு 

அறிவு உணர்வுகளின் தொகுப்பு 

உடமையை கைவிட்டு 

உணர்வில் திளைப்பது சமாதானம் 

சமாதானம் என்னும் சமத்துவத்தை சாட்சியாக்கிக் கொள்வோம் 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.