சர்க்கரை அளவு அதிகரிப்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

நமது அன்றாட உணவு வகைகளில் வெள்ளை சர்க்கரை தவறாமல் இடம்பெறுகிறது, இதன் இனிப்பு சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.

தினசரி நாம் எவ்வளவு சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற வரம்பு உள்ளது அதனை மீறி நாம் சர்க்கரையை எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகிறது.

கேக், குக்கீஸ், சாக்லேட்டுகள், ப்ரவுனீஸ், டோனட்ஸ் போன்ற பல சுவையான பொருட்களின் தயாரிப்பில் சர்க்கரை முதன்மையானதாக சேர்க்கப்படுகிறது.

❇️ ஏற்படும் அபாயங்கள்.

அதிகளவு சர்க்கரை சேர்த்துக்கொள்வதால் நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய் அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

நாம் அதிகளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்பதை சில அறிகுறிகளின் மூலம் நமது உடல் வெளிப்படுத்துகிறது.

இந்த அறிகுறிகளை நாம் உற்றுநோக்கி சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவை குறைக்க வேண்டும்.

❇️அதிகளவு சர்க்கரை

அதிகளவு சர்க்கரை சாப்பிடுவதால் சரும ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக நீங்கள் அதிகளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை உங்களது முகப்பரு காட்டிவிடுகிறது.

சர்க்கரை உடலில் ஆண்ட்ரோஜன் உற்பத்தியை தூண்டிவிட்டு முகப்பருவை உண்டாக்குகிறது மற்றும் இது முகத்தில் அதிகப்படியான எண்ணெயையும், வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்கள் அல்லது உங்களால் அன்றைய தினம் எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்யமுடியவில்லை என்றால் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

❇️ சர்க்கரை

அதுவே சர்க்கரையை சாப்பிட்ட பின் உடலுக்கு ஆற்றல் கிடைத்துவிட்டதாக உணர்ந்தால் உங்கள் உடலை அதிகப்படியான சர்க்கரைக்கு அடிமையாகி உள்ளது என்று அர்த்தம்.

உப்பு மட்டுமல்ல, அதிகப்படியான சர்க்கரையும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, எனவே சர்க்கரையை அதிகப்படியாக உணவில் சேர்த்துக்கொள்வதை நிறுத்த வேண்டும்.

உயர் அழுத்தத்தால் கார்டியோ வாஸ்குலார் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளலால் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை பொதுவான ஒன்றாக இருக்கிறது.

❇️உடல் எடை

இது மரபணுக்களில் சிக்கலை உண்டுபண்ணுகிறது. மக்கள் பலரும் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக சர்க்கரையை தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே இருக்கின்றது. எனவே இந்த பொருளை சாப்பிடும்போது எப்போதும் பசியுணர்வு இருக்கும்.

உடலில் நார்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும்போது அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ள நேரிடும்.

அதிகளவு சர்க்கரையை எடுத்துக்கொள்ளாமல் இருக்க சில பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியம்.

❇️ டயட்

அதிகப்படியான உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டுவிடாமல், சிறிது இடைவெளி விட்டு குறைவான அளவு உணவை உண்ணுங்கள் மற்றும் உங்கள் டயட்டில் அதிகளவு நார்சத்து நிறைந்த உணவுப்பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெள்ளை சர்க்கரையாக சாப்பிடுவதை தவிர்ப்பது மட்டும் முக்கியமல்ல, சர்க்கரை கலந்த மற்ற உணவுகளையும் தவிர்ப்பதில் கவனமாக இருங்கள்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் ஒதுக்கிவிடுங்கள்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.