பெண்கள் அடிக்கடி தேநீர் ,கோப்பி குடிப்பது ஆபத்தா?

தேநீர்,கோப்பி அருந்துவது நன்மையானது எனவும் தீமையானது எனவும் கூறுகின்றனர்.ஒரு சில பழக்கமுறையினால் இது உடலுக்கு தீங்கானதாக அமையக்கூடும்.

நிறைய பேருக்கு காலையில் வெறும் வயிற்றில் தேநீர் கோப்பி குடிக்கும் வழக்கம் இருக்கிறது,காலையில் எலும்பியவுடனேயே தேனீரோ அல்லது கோப்பியோ அருந்தாமல் நாளே ஓடாது என்பர் சிலர்,அது தவறான பழக்கம் என்று உங்களுக்கு தெரியுமா?

என்ன பாதிப்பை ஏற்படுத்தும் ?

தூங்கி எழுந்தவுடனே தேநீர் அருந்தினால் நீராவியாகி போய்விடும்,அதுமட்டுமில்லாது தேநீர் அருந்துவதால் உடலில் ஒரு விதமான அமிலம் ஏற்பட்டு அது தோல் சம்பந்தமான பிரச்சினையும் ஏற்படுத்தலாம்.

அதனால் தேநீர் அருந்துவதற்கு பதிலாக இரவு தூங்குமுன் சூடான பால் அருந்திவிட்டு தூங்கலாம்.காலையிலேயே தேநீர் அருந்துவதால் பற்சொத்தையாகும் வாய்ப்புகளும் இருக்கிறது.   

சிலபேருக்கு உணவு உட்கொண்ட உடனேயே தேநீர் அருந்தும் பழக்கம் இருக்கிறது அதுவும்கூட தவறான பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.ஏனெனில் உணவிலுள்ள உப்பும் தேநீரில் உள்ள பாலும் சேரும்போது அது ஒரு விதமான நஞ்சை ஏற்படுத்தும். இது உணவில் சத்துக்களையும் உறிஞ்சவிடாமல் தடுத்துவிடும்.

இந்த தேநீர் கோப்பி எனப்படும் பானங்கள் குளிர்காலத்தில் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டவை.வெயில்காலங்களில் அத்தோடு வறண்ட உடலமைப்பு கொண்டோர் தேநீர் கோப்பி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.காரணம்,முடி உதிர்வு மற்றும் மாதவிடாய் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளநேரிடும்.

இதனை தடுக்க என்ன செய்யலாம்? 

தேநீரை தவிர்க்கவே முடியாது என கூறுபவர்களுக்கு ஒரு டிப்ஸ் இருக்கிறது,தேநீரோடு அதிகம் தண்ணீர் சேர்த்துக்கொள்ள கூடாது திக்காகவே அருந்த வேண்டும்,நிறைய பேர் தேநீர் தயாரிக்கும் முறையில் தவறு விடுகின்றனர்.

தேநீர் தயாரிக்கும்பொழுது,தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும்பொழுதே தேநீருக்கு தேவையான மசாலா பொருட்களை சேர்ப்பது சரியானது,ஒரு சிலர் பாலிலேயே மசாலா பொருட்களையும் சீனியையும் சேர்த்து கொதிக்கவிடுவார் அது தவறானது.   

எனவே எந்த உணவாக இருந்தாலும் சரி பானமாக இருந்தாலும் சரி அளவோடு,எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிந்து செயற்படுதல் நன்று.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.