உலக பெற்றோர் தினம் இன்று.

உலக பெற்றோர் தினம் இன்று

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் திகதி உலக பெற்றோர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபை 2012 ஆம் ஆண்டு இன்றைய தினத்தை பெற்றோர் தினமாகக் கொண்டாட முடிவு செய்தது. 

உலகின் அனைத்துப் பகுதியிலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்காக தன்னலமற்று செயல்படுகிறார்கள். குழந்தைகளுக்காக தங்களது வாழ்வையே சமரசம் செய்து கொள்கிறார்கள்.

அந்தப் பெற்றோரின் முழு முயற்சியும் எதற்காகவெனில், போட்டி நிறைந்த இவ்வுலகில் தமது பிள்ளை நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான ஒரு தகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகத்தான். 

நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பெற்றோர் தங்களது வருமானத்தில் பிள்ளையின் படிப்புக்காக மட்டும் 50மூ முதல் 60மூ சதவீதம் வரை செலவு செய்கிறார்கள். இன்னும் சில குடும்பங்களில் கடன் வாங்கிக் கூட பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க நினைக்கிறார்கள்.

உலகெங்கிலும் அனைத்து பெற்றோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றுக்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதியே ஜூன் 1 ஆம் திகதியை உலக பெற்றோர் தினம் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.

இன்று நகரங்களில் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இது வேதனை தருகின்றது. இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள்தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறார்கள்.

 'முன் செய்யின் பின் விளையும்' என்ற பழமொழியை மனதில் இருத்தி இளைய தலைமுறையினர் வாழ வேண்டும். இன்று நமது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவர்.

 இரக்கம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாக உலகில் பலர் இருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? ஒவ்வொருவரும் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா என யோசித்து, பிள்ளைக்கு ஆகாது எனத் தெரிந்ததும் ஆசைப்பட்ட உணவுகளை உண்ண மறுத்து விடுகிறாள்.

கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின்னர் ஒதுக்குகிறாள் தாய். அதுதான் தாயன்பு. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த அன்னையையும் தந்தையையும் வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அநாதை விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக் கொள்ள வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை! 

தாயின் காலடியில் தான் சுவனம் உள்ளது

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.