வரலாற்றில் இன்று ஜூன் 17.2023

சூன் 17 கிரிகோரியன் ஆண்டின் 168 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 169 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 197 நாட்கள் உள்ளன.

❇️இன்றைய தின நிகழ்வுகள்

653 – திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார்.

1244 – பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

1397 – டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் டென்மார்க்கின் முதலாம் மார்கரெட்டின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

1579 – சர் பிரான்சிஸ் டிரேக் நோவா அல்பியனில் (இன்றைய கலிபோர்னியா) தரையிறங்கி அதனை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.

1596 – இடச்சு நாடுகாண் பயணி வில்லியம் பாரென்ட்சு ஆர்க்டிக் தீவுக்கூட்டமான ஸ்பிட்சுபெர்கனைக் கண்டுபிடித்தார்.

1631 – மும்தாசு மகால் பிள்ளைப்பேற்றின் போது இறந்தார். அவரது கணவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் அடுத்த 17 ஆண்டுகளுக்கு மும்தாசுக்கான நினைவுச்சின்னமான தாஜ்மகாலைக் கட்டுவதில் முனைந்தார்.

1767 – ஆங்கிலேயக் கப்பல் தலைவர் சாமுவேல் வாலிசு தாகித்தியைக் கண்டறிந்தார்.

1794 – ஆங்கிலோ-கோர்சிக்கன் இராச்சியம் அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் இது கலைந்தது.

1839 – அவாய் இராச்சியத்தில், ரோமன் கத்தோலிக்கர்கள் சுதந்திரமாக சமய வழிபாட்டில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

1843 – நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினருக்கும், பிரித்தானியக் குடியேறிகளுக்கும் இடையில் சமர்கள் இடம்பெற்றன.

1885 – விடுதலைச் சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.

1900 – மேற்கு கூட்டுப் படைகளும் சப்பானியப் படைகளும் இணைந்து சீனாவின் தியான்ஜின், தாக்கு கோட்டைகளைக் கைப்பற்றின.

1911 – செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தார்.

1929 – நியூசிலாந்து மர்ச்சிசன் நகரில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.

1933 – அமெரிக்காவின் கேன்சசு நகரில் கொள்ளைக்காரன் பிராங்க் நாஷ் என்பவனை விடுவிக்கும் பொருட்டு கொள்ளைக்காரர் நடத்திய தாக்குதலில் நான்கு எஃப்பிஐ பணியாளர்களும், பிராங்க் நாஷும் கொல்லப்பட்டனர்.

1939 – பிரான்சில் கடைசித் தடவையாக பகிரங்கமாகக் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இயூசன் வீடுமேன் என்பவர் இவ்வாறு கொல்லப்பட்டார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் லான்காஸ்ட்ரியா கப்பல் செருமானிய லூப்டுவாபே படையினரால் சென் நசேர் அருகில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில் குறைந்தது 3,000 பேர் உயிரிழந்தனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் லிபியாவின் கப்பூசோ கோட்டையைத் தாக்கி இத்தாலியப் படையினரிடம் இருந்து கைப்பற்றினர்.

1940 – எசுத்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய மூன்று பால்ட்டிக் நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தன. 1991 இலேயே இவை விடுதலை பெற்றன.

1944 – ஐசுலாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலையை அறிவித்து குடியரசானது.

1948 – டக்லசு டிசி-6 என்ற அமெரிக்க விமானம் பென்சில்வேனியா, கார்மேல் குன்றில் மோதியதில் அனைத்து 43 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

1953 – பனிப்போர்: பெர்லினில் கிழக்கு செருமனி அரசுக்கெதிராக தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1960 – நே பெர்சு அமெரிக்கப் பழங்குடியினர் 1863 உடன்படிக்கைப்படி அவர்களது 7 மில்லியன் ஏக்கர் நிலம் குறைவாக மதிப்பீடு (4 சதம்/ஏக்கர்) செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டமைக்காக $4 மில்லியன் இழப்பீடு பெற்றனர்.

1963 – தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் 2,000 பேர் வரை கலகம் செய்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.

1967 – அணுகுண்டு சோதனை: சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.

1985 – டிஸ்கவரி விண்ணோடத்தில் முதலாவது அராபிய விண்வெளிவீரர் (சுல்தான் பின் சல்மான் பின் அப்துலசீசு அல் சவுதி) விண்வெளிக்கு சென்றார்.

1991 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்கர்கள் அனைவரும் பிறப்பின் போது இனவாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.

1992 – “கூட்டு ஆயுதக்குறைப்பு” ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

2006 – மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2015 – சார்லசுட்டன் படுகொலை: தென் கரொலைனாவில் ஆப்பிரிக்க மெதடித்த தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

2017 – மத்திய போர்த்துகல் பகுதியில் காட்டுத்தீ பரவியதில் 64 பேர் உயிரிழந்தனர், 204 பேர் காயமடைந்தனர்.

❇️ இன்றைய தின பிறப்புகள்

1239 – முதலாம் எட்வர்டு, ஆங்கிலேய மன்னர் (இ. 1307)

1704 – ஜான் கே, ஆங்கிலேயப் பொறியியலாளர் (இ. 1780)

1800 – வில்லியம் பார்சன்சு, ஆங்கிலேய-அயர்லாந்து வானியலாளர், அரசியல்வாதி (இ. 1867)

1882 – இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, உருசிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1971)

1883 – மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா, தமிழக அரசியல்வாதி (இ. 1943)

1898 – மௌ. கொ. எசர், இடச்சு வரைகலைஞர் (இ. 1972)

1921 – மீ. ப. சோமு, தமிழக எழுத்தாளர் (இ. 1999)

1939 – இயன் கிருகரன், இலங்கை-செருமானியத் தொழிலதிபர்

1942 – முகம்மது அல்-பராதிய், நோபல் பரிசு பெற்ற எகிப்திய அரசியல்வாதி

1950 – ப. அருளி, தமிழக சொல்லாய்வறிஞர்

1973 – லியாண்டர் பயஸ், இந்திய டென்னிசு வீரர்

1976 – ஸ்காட் அட்கின்ஸ், ஆங்கிலேய நடிகர்

1980 – வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிசு வீராங்கனை

1981 – ஷேன் வாட்சன், ஆத்திரேலியத் துடுப்பாளர்

1988 – ஸ்ரெபனி றைஸ், ஆத்திரேலிய நீச்சல் வீராங்கனை

❇️ இன்றைய தின இறப்புகள்

656 – உதுமான், பாரசீக ஆட்சியாளர் (பி. 577)

676 – இரண்டாம் ஆதேயோதாத்துஸ் (திருத்தந்தை)

1631 – மும்தாசு மகால், சாஜகானின் மனைவி (பி. 1593)

1674 – ஜிஜாபாய், மராத்தியப் பேரரசரின் தாயார் (பி. 1598)

1839 – வில்லியம் பென்டிங்கு பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 14வது தலைமை ஆளுநர் (பி. 1774)

1911 – ஆஷ் துரை, திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளர் (பி. 1872)

1911 – வாஞ்சிநாதன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1886)

1967 – செகவீர பாண்டியனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1886)

1996 – மதுகர் தத்ரேய தேவ்ரஸ், இந்திய அரசியல்வாதி (பி. 1915)

2021 – கென்னத் கவுண்டா, சாம்பியாவின் 1-வது அரசுத்தலைவர் (பி. 1924)

❇️ இன்றைய தின சிறப்பு நாள்

தந்தையர் தினம் (எல் சால்வடோர், குவாத்தமாலா)

விடுதலை நாள் (ஐசுலாந்து, டென்மார்க்கிடம் இருந்து 1944)

ஆக்கிரமிப்பு நாள் (லாத்வியா)

பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.