இளநரைக்கு நிரந்தர தீர்வு..! இதை மட்டும் செய்தால் போதும் உடனடி பலன்.

ஆண்களாக இருக்கட்டும் சரி பெண்களாக இருக்கட்டும் சரி அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை இளவயதில் முடி நரைப்பதாகும்.

இதனால் பெரும்பாலானோர் மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர்.

உங்களுக்கு சிறுவயதில் இருந்தே இளநரை இருக்கின்றவர்கள் முடியை கருப்பாக மாற்றுவதற்கு பல செயற்கை முறைகளை நாடுகின்றனர். ஆகவே நரைமுடியை இயற்கை முறையிலேயே கருமையாக மாற்ற முடியும்.

இருப்பினும் இத்தகைய நரைமுடிக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் எளியமுறையில் செய்யக்கூடிய இலகுவான முறை ஒன்றை பார்ப்போம்.

📌தேவையான பொருட்கள்

👉சுத்தமான தேங்காய் எண்ணெய் – 2 கப் அளவு

👉நெல்லிக்காய் பெரியது – 4

👉மருதாணி இலை – கைப்பிடி அளவு

👉கருவேப்பிலை- 1 கப் அளவு

👉செம்பருத்தி இதழ்கள் – 2 பூக்கள்

👉சீரகம் – 4 ஸ்பூன்

👉கிராம்பு – 3

📌செய்முறை 

முதலில் நெல்லிக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மருதாணி மற்றும் கருவேப்பிலையையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.

செம்பருத்தி இதழை பிரித்து நன்றாக தண்ணீரில் அதன் மேலுள்ள மருந்துகள் போகும் வரை அலசிக்க் கொள்ளுங்கள். சீரகம் கிராம்பையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் எண்ணெயை சூடாக வேண்டும். அதில் நெல்லிக்காய், மருதாணி கருவேப்பிலை ஒன்றன்பினொன்றாக போடவும்.

அதன் நிறம் மாறி அடியில் தங்கும் வரை குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள். அதன்பின்னர் செம்பருத்தி இதழ்களை போடவும்.அதன் நிறம் பழுப்பாக மாறும்.

உடனே சீரகம், கிராம்பையும் போட்டு ஒரு நிமிடம் குறைந்த தீயில் வையுங்கள். பின்னர் இறக்கி ஆறவிடவும்.

ஆறிய பின் ஒரு சுத்தமான துணியினால் வடிக்கட்டி அந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை வாரம் 3 அல்லது 4 நாட்கள் உபயோகிக்கலாம். பிறகு நரைமுடி, முடி உதிர்தல், பாதிப்பில்லாமல் முடி அடர்த்தியாகவும் வளரும்.    

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.