மாலை நேரத்தில் இந்த உணவுகளை தவிர்த்தால் உடல் எடை குறையுமா?

மிக எளிய இயற்கையான வழிகளின் மூலம் நமது உடல் எடையை நம்மால் குறைக்க முடியும் மதிய உணவுக்கும் இரவு உணவிற்கும் இடையிலான மாலை நேரத்தில் மக்கள் உட்கொள்ளும் உணவில் செய்யும் தவறால் உடல் ஆரோக்கியம் கெடுகின்றது.

மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒருவருக்கு பசித்தாலும் அந்த நேரத்தில் முழு உணவையும் சாப்பிடத் தோன்றாது.

அந்த நேரத்தில் நாம் உட்கொள்ளும் உணவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இந்த நேரத்தில் உட்கொள்ளப்படும் சில ஆரோக்கியமற்ற பதார்த்தங்களின் மூலம் நாமே பல நோய்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

ஆகையால் இந்த நேரத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியமாகும்.

❇️மாலை வேளையில் உட்கொள்ளக்கூடாத 5 உணவுகள்

இவற்றால் உடல் எடை அதிகரிப்பது மட்டுமின்றி, பல நோய்களும் உடலை அணுகக்கூடும்.  

📌பொரித்த உணவு

மாலையில் எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். சமோசா மற்றும் சாட் போன்றவற்றை உட்கொண்டால் எடை வேகமாக அதிகரிக்கும், கொலஸ்ட்ரால் அளவும் அதிகமாகும்.

📌நொறுக்குத் தீனி

நொறுக்குத் தீனி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் மாலையில் உட்கொள்ளக் கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவு பல வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும், எடையை அதிகரிக்கும்.

📌மது அருந்துதல்

மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மது அருந்தினால் இரவு தூக்கம் கெடுவதுடன், உடல் உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும்.

📌சீஸ்

சீஸ் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இதில் சோடியம் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

📌இனிப்புகள்

இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதையும் நிறுத்துங்கள். ஐஸ்கிரீம், இனிப்புகள் போன்றவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால் இவை பல நோய்களை உண்டாக்கும். இதனால் எடையும் விரைவாக அதிகரிக்கும்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.