நல்லவர்களோடு இணைந்து.

"எனக்கு அதிகமாக தேவைப்படுபவர் யாரென்றால்!, என்னால் இயன்றதைச் செய்யுமாறு தூண்டும் மனிதர்கள்!” என்றார் அமெரிக்க அறிஞர் எமர்சன்...

நம்மைச் சுற்றியும் எத்தனை மனிதர்கள்...! சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதுடையவர்கள், முதியவர்கள, என்று எத்தனை மனிதர்கள்!, இவர்களுக்கு தங்கள் குறிக்கோள் எதுவென்று தெரியவில்லை. அதற்கான விழிப்புணர்வும் இல்லை...

அதனால் தான்!, அவர்களின் அளவிட முடியாத ஆற்றல்கள் உறங்கிக் கிடக்கின்றன...

நடுவயதைக் கடந்த எத்தனையோ நபர்கள், அதன் பிறகு பேரறிஞர்களாக., தொழில் வல்லுநர்களாக வளர்ந்ததை வரலாறுகள் கூறுகின்றன...

அதற்கு உந்துகோலாக இருந்தது எது...? அது ஒரு சொற்பொழிவாக இருக்கலாம். ஒரு நூலாக இருக்கலாம், அல்லது ஒரு நண்பரின் தனிப்பட்ட அறிவுரையாகவும் இருக்கலாம்...

ஐம்பதாயிரம் குழந்தைகளை முப்பது ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த வல்லுநர்களின் முடிவு என்னவென்றால்..,

பிறந்த குடும்பம் - கோத்திரத்தை விட., சூழ்நிலைகளும், சுற்றுச்சார்புகளும் திறன் மிக்கவை. இவைகளே குழந்தைகளை அதிகமாக பாதிப்படைய வைக்கிறது...

தோல்வி அடைந்தவர்களைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்!, அவர்கள் பெரும்பாலோரின் தோல்விக்குக் காரணம் அவர்களை ஊக்குவிக்க யாரும் இல்லாததே காரணம் என்று அறிய முடியும்...

அதனால்!, உங்களை ஊக்குவிக்கும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளுக்கே எப்போதும் ஆயத்தமாக இருங்கள். உங்களை அறிந்து உங்களுக்கு உதவி செய்யும்...

நீங்கள் முழு மனிதர்களாக மாற, உற்சாகமூட்டும் மனிதர்களுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பதிவுகளை உங்களுக்குப் பிறகும் இந்த மண்ணுலகில் விட்டுச் செல்ல உதவுபவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்...

ஆம் நண்பர்களே...!"

🟡 ஆர்வமானது தொற்றுநோயைப் போன்றது, நீங்களும் முன்னேறத் துடிப்போருடன் இருக்கும் காலம் வரை அந்தப் பண்புகளால் ஈர்க்கப்படுவீர்கள். உங்களுக்கு சோம்பல் ஏற்படும் போதேல்லாம் முன்னேறிச் செல்பவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் தூண்டி விடும்....!

🔴 வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கான உரைகள் இதுதான், ஒவ்வொருவரும் தத்தமது பணிகளின் மேல் கொள்ளும் கொழுந்து விட்டெரியும் ஆவல் தான்!, உச்சியை அடைய நினைத்தால் ஏறித் தான் ஆகவேண்டும். கால்கள் வலிக்கும் களைப்பாகும். இதெல்லாம் உங்களுக்கு சாத்தியமில்லை என்று மனம் அச்சுறுத்திப் பார்க்கும்...!!

⚫ 'ஒய்வெடுத்துக் கொள் என்று சபலம் காட்டும்' தளராதீர்கள்...!, செய்வதை முழுமையாக விருப்பத்துடன் செய்தால், எந்த வலியும் வேதனை தராது. உச்சியை அடைந்ததும் அத்தனைக் களைப்பும் நலமாகும்...!!!

- உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.