அன்பின் ஆழம்!

அன்பு மனதில் தோன்றும் மன வெழுச்சியாகும். அது ஒரு தீவிர உணர்ச்ச்சி, மனக் கிளர்ச்சியாகும், பல நிலைகளைக் கொண்டது. மற்ற மனங்களை உருக்கும் தன்மை கொண்டது. 

வாழ்வுப் பாதையில் வாழ்க்கையை வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது அன்பே. உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அது பொதுவானது, 

பொருமையான அன்பில் அமைதியிருக்கும். 

அமைதியான அன்பில் ஆழமிருக்கும். ஆழமான அன்பில் பண்புகள் குடியிருக்கும். 

அடித்து அடக்கி வெல்வதைவிட அன்பினால் சுலபமாக வெற்றி கொள்ளலாம். 

துப்பாக்கி முனைகள் சாதிக்காததை அன்பின் வழி கண்கள் சாதிக்கும். இந்த அதிசய அன்பின் ஆழத்தை ஒவ்வொரு உயிரும் உணர வேண்டும். 

உலகில் உள்ள பழமையான ஆனால் அதி நவீன சக்திகளைக் கொண்ட கருவி அன்பு ஒன்றேயாம். உலக உயிர்களின் இதயங்களை மனதை நாம் அன்பால் வெல்லலாம்.

நான், என்னுடையது எனும் தன்னுணர்ச்சியால், சுயநலத்தால் பெறும் வெற்றிகள் எல்லாம் வெற்றியாகாது. அப்படி சுய நலத்தால் வென்றாலும் அது உண்மையான வெற்றியாகாது. 

ஆனால் அன்பினால் தோல்வி ஏற்பட்டிருந்தாலும் அது தற்காலிகமானதுதான், மீண்டும் அதில் தானாக வெற்றி கிட்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து நம் உள்ளார்ந்த மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

மிகவும் துன்பங்களைக் கொண்ட நேரங்களில் யாரும் அன்பை பற்றி நினைக்க முடியாது, 

ஆனாலும் நாம் இவ்வுலகில் வாழ்வுப்பயணம் எனும் நிகழ்வை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கு அன்பு மிக உதவியாய் இருக்கும். 

ஓன்று நீங்கள் கொண்ட அன்பு. மற்றது மற்றவர்கள் உங்கள்மேல் கொண்ட அன்பாகும். 

எனவே துன்பங்களிலிருந்து விடுபட வன்முறைகளை கையில் எடுக்காதீர்கள். அப்படி எடுத்துக் கொண்டு அதிலிருந்து வெளிவர மறுக்கும் அன்பர்களை விட்டு விடுங்கள். அவரின் முடிவு வேறு விதமாய்த்தான் இருக்கும்.

எந்நிலையிலும் அமைதியான அன்பு அளவிற்கதிகமான சக்தியுடையது. உள்ளார்ந்த மன நிம்மதியை உறுதியைத் தரும். 

நாம் முழு மன நிம்மதி மற்றும் அமைதியான அன்புடன் இருக்கும்போது நம்மைச்சுற்றி ஓர் அன்பு வட்டத்தை ஏற்படுத்துகின்றோம். அது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு பயனை அளிக்கக் கூடியது. 

நம் நண்பர்களோ, உறவினர்களோ துன்பத்தில் வாடும் போது அதை நாம் நினைத்து அதிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும் என உண்மையான அன்பினால் அன்பு கொண்டு நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் நினைக்கும்போது அந்த உணர்வுகள் மின் காந்த அலைகளாக மாறி காற்றில் பரவி பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சென்றடைந்து நலம் விளைவிக்கும். 

இதை நாம் உணர்ந்து செயல் பட்டால் நலம். 

இது போன்ற அன்பை ஒவ்வொருவரும் மனதில் கொள்வதற்கும் மற்றவர் துன்பம் போக்கும் வல்லமையை அடையவும் வாழ்வில் அன்பு மிக கொண்டு மனதளவில் மனித நேயம் கொண்டு நம்பிக்கையுடன் நம் ஆழ் மனத்தில் இருக்கும் அன்பை அடிக்கடி தூய்மை கொள்ளச்செய்ய வேண்டும். 

நாம் அமைதியாக இருந்து நம்பிக்கையுடன் தியானம் செய்தால் அந்த நிலை துன்பத்தில் துயரப்படும் ஒருவருக்கு கண்டிப்பாக உதவி புரியும். 

அந்த நிலைக்கு எல்லோரும் வாருங்கள். அன்பு கொண்டவராகுங்கள். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.