சமுதாயச் சிற்பிகள்.

பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் நமக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகது...

வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத் தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான்...

மாணவர்களுடன் நாளும் தொடர்பில் இருக்கும் ஒரு ஊடகமாக ஆசிரியர்களே விளங்குகிறார்கள்...

ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை மாற்றி அதன் வழி ஒரு சமுதாயத்தையே மாற்றும் திறன் கொண்டவர்களாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர்.

எழுச்சி மிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். மாணவர்களுக்குச் சரியான தகவல்களை ஆசிரியர்களால் தான் வழங்க முடியும்..

ஆசிரியர்களே மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கின்றார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

பொதுவாக ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஆசிரியரைப் பார்த்துத் தான் தன்னுடைய பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கிறான்..

ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்...?

அவர்கள் முகத்தில் எப்போதும் மெல்லிய புன்னகை இருக்க வேண்டும். சிடுசிடுவென இருக்கும் முகம் மாணவர்களைக் கலவரப்படுத்தும்...

.தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும். அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையைக் கெடுத்து விடக் கூடாது...

பாடத்திட்டத்தோடு நின்று விடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, அன்றாடும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை சொல்ல வேண்டும்.

மாணவர்களின் மனநிலையைப் புரிந்துக் கொண்டவராக இருக்க வேண்டும். பாடம் நடத்தும் போதும், வீட்டுப் பாட வேலைகள் கொடுக்கும் போது மாணவர்களின் மன,உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்...

பிறர் மீது காட்டும் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்குக் கூட கொண்டு வரக் கூடாது. தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, 

அர்ப்பணிப்புடன் வகுப்பறையில் செயல்பட வேண்டும்...

ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டப்பழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் திட்டக் கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக் கூடாது...

எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி,வெறுப்பு உமிழக் கூடாது. கண்டிப்பும் வேண்டும். கனிவும் வேண்டும்.

படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்து கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுப்பதைப் பார்க்கின்றோம்...

ஆம் நண்பர்களே...!

⚫ ஒருவன் கல்வியிலோ!, தொழிலிலோ!, செல்வச் செழிப்பிலோ உயர்ந்து வளர்ந்தால் அதனை மகிழ்ச்சியுடன் சற்றும் பொறாமையின்றி பகிர்ந்து கொள்பவர்கள் வாழ்க்கையில் இருவர் தான்...!

⚫ ஒருவர் நம்மைப் பெற்ற தாய் - தந்தையர். மற்றொருவர் இவர் எனது மாணவர்’ எனப் பெருமிதப்படும் ஆசிரியர்...!

உடுமலை சு. தண்டபாண

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.