திட்டமிடாத செயல்.

இந்த உலகில் நம்மைச் சுற்றிப் பலர் கடினமாக உழைக்கின்றனர். ஆனால்!, தோல்வி என்பதையே சந்தித்துக் கொண்டு வெற்றியை மருந்துக்காகக் கூடப் பார்ப்பது இல்லை.

காரணம்!,  பலர் ஒரு செயலைத் திட்டமிடாமல் செய்து விட்டு, தோல்வியடைந்து விட்டு, பிறகு தோல்விக்கான காரணத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர்...

மேலும், பலர் பல நேரத்தில் தோல்வியடைந்தும் கூட அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது கிடையாது...

நம்மைச் சுற்றிப் பல தோல்வியடைந்த மனிதர்கள் உள்ளனர். அதே வேளையில், நம்மைச் சுற்றி சில வெற்றி அடைந்த மனிதர்களும் உள்ளனர்...

தோல்வியடைந்த மனிதர்களிடம் திட்டமிடாத வாழ்க்கை முறையைப் பார்க்கலாம். அதே நேரத்தில் வெற்றி அடைந்த மனிதர்களிடம் திட்டமிட்ட செயலைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

வெற்றியடைந்த மனிதர்களிடம் நேரம் தவறாமை, நேரத்தில் ஒரு செயலைச் செய்யும் பாங்கு என்று பல நல்ல குணங்கள் கண்கூடாகத் தென்படும். மேலும்!, வெற்றியாளர்கள் சிந்தனையோடு உழைக்கின்றார்கள். அதற்கு உண்டான பலனை அவர்கள் அடைகிறார்கள்...

''கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை" என்ற நேற்றைய கோட்பாடு தவறானது. "சிந்தனையோடு திட்டமிட்ட கூடிய உழைப்புக்கு ஈடு இணை கிடையாது" என்பது தான் இன்றைய காலகட்டத்துக்கு உகந்தக் கோட்பாடு...

கடினமாக உழைப்பவர்கள், அதுவும் திட்டமிடாமல் கடினமாக உழைப்பவர்கள், வெற்றியடைய முடியாது...

திட்டமிடுவதில் தான் வெற்றியின் மறைபொருள் (ரகசியம்) அடங்கியுள்ளது. சரியான நேரத்தில், சரியான வேலையை சரியாகத் திட்டமிட்டால் வெற்றியில் பாதி அடைந்ததாகப் பொருள்...

ஆம் நண்பர்களே...!

 வெறுமே கடுமையாக உழைத்தால் வெற்றியடைய முடியாது. உழைப்புக்குண்டான பலனைப் பெற வேண்டுமானால் முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். திட்டமிடாமல் செயல்படுபவர்களின் வாழ்க்கை, துடுப்பு இல்லாத படகைப் போன்று நிலைகுலைந்து போய் விடுகிறது...!

வெறுமனே ஒரு செயலை செய்கிறோம் என்று இல்லாமல், எதைச் செய்கிறோம் என்ற தெளிவான சிந்தனையோடு வேண்டும். திட்டமிடாத கடின உழைப்பு என்பதில் பலன் மிகவும் குறைவாகவே கிடைக்கும்...!!

 ஆனால்!, காலமும், உடல் உழைப்பும் மிக அதிகம் செலவிடப்பட்டிருக்கும். எனவே!, எந்த செயலையும் வெற்றிகரமாக்க, திறனாக திட்டமிட்டு உழைத்தால் தான், முழுமையான வெற்றி கிடைக்கும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.