சர்க்கரை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருமா?

நீரிழிவு நோய் என்றாலே இனிப்பு உணவுகளை தவிர்க்கவேண்டும் என சொல்வார்கள்.

ஆனால் சர்க்கரையை உண்பதால்தான் சர்க்கரை நோய் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சில மறைமுக தொடர்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, அதிக எடை அல்லது பருமனாக இருப்பது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. கூடுதல் சர்க்கரை உணவுகள், குளிர் பானங்கள், இனிப்புகள் சாப்பிடுவது  உடல் எடையை அதிகரிக்கிறது.

எனவே, சர்க்கரைக்கும் சர்க்கரை நோய் அபாயத்துக்கும் இடையே தொடர்பு உள்ளது. ஆனால், சர்க்கரை நீரிழிவு நோயை உண்டாக்கும் என்று சொல்வதில் எந்த அடிப்படையும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.

பெரும்பான்மையான மக்கள் நீரிழிவு நோய் வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் இனிப்பு சாப்பிடுவதையே தவிர்க்கின்றனர்.

அதிக சர்க்கரை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா என்றால் ஆம் என்றும் சொல்ல முடியாது இல்லை என்றும் சொல்ல முடியாது. அதேசமயம் சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது.

📌 டைப் 2 நீரிழிவு

ஆனால் அதிகசர்க்கரை சாப்பிடுவதால் உடல் பருமன், அதிக எடை மற்றும் டைப் 2 நீரிழிவு ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு உள்ளது. எனவேதான் சர்க்கரை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் என்று கூறுகின்றனர்.

நீரிழிவு நோய் டைப் 1 நீரிழிவு நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் என இரண்டு வகைகளாகும்.

📌டைப் 1 நீரிழிவு

டைப் 1 நீரிழிவு நோய் உணவுமுறை அல்லது வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது அல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மாறாக, இது பெரும்பாலும் மரபணு காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுகிறது.

பெற்றோருக்கோ அல்லது உடன் பிறந்தவருக்கோ டைப் 1 நீரிழிவு நோய் இருந்தால், அந்த நபருக்கும் டைப் 1 நீரிழிவு நோய் உருவாக்கும் அபாயம் உள்ளது.

விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

இந்த வகை நீரிழிவு நோயைத் தடுக்க என்ன மருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் 2022 இல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் டைப் 1 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தை அனுமதித்தது. குறிப்பிட்ட நாட்களுக்கு குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

மறுபுறம், டைப் 2 நீரிழிவு மிகவும் சிக்கலான பிரச்சனை. இது பல அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இதில் பல ஆபத்துகள் உள்ளன.

இந்த வகை நீரிழிவு பிரச்சனை முக்கியமாக வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது. இதன் விளைவாக, சர்க்கரையிலிருந்து விலகி இருப்பது அவசியம்.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை குளுக்கோஸ் அளவை அதிகரித்து கட்டுப்பாடற்ற நீரிழிவுக்கு வழி வகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.