விருப்பத்துடன் செய்தால்.

நாம் படிக்கும் பொழுதோ அல்லது விளையாடும் பெழுதோ அல்லது ஏதாவது ஒரு வேலை செய்யும் பொழுதோ, அதை நாம் விரும்பிச் செய்யாமல், அதை ஒரு கடமையாகக் கருதி செய்தால் அந்த செயலினால் நமக்கு எவ்விதப் பயனும் கிடைக்காது.

கடமைக்கு என்று ஒரு செயல் செய்தால், அது உறுதியாகத் தவறாகத் தான் முடியும். அதுவே!, ஒரு செயலை நீங்கள் மகிழ்ச்சியாக விரும்பிச் செய்தால், அது உங்களுக்கு எதிர்பாராத பயனையும் வெற்றியையும் தேடித் தரும்.

நாம் செய்யும் செயல் முதலில் நமக்கு ஈடுபாடு வேண்டும். அந்த செயல் நமக்குப் பிடித்திருக்க வேண்டும். நீங்கள் விருப்பம் இல்லாமல் செய்தால் அது கடமைக்கு செய்யும் செயலாகி விடும்.

நீங்கள் விருப்பத்தில் ஒரு செயல் செய்தீர்கள் என்றால் அந்த செயல் கண்டிப்பாக நல்ல வகையாக அமையும். அது உங்களுக்கு வெற்றியைத் தரும்.

நீங்கள் படிக்கும் பொழுது, எனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை, நான் படித்தால் அதனைக் கடமைக்கு என்று தான் படிப்பேன் என்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் படிக்க வேண்டாம்.

உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதனை நீங்கள் எடுத்துச் செய்யுங்கள்.

உங்களுக்கு விளையாடுவதில் ஆர்வம் இருந்தால், அல்லது படம் பிடிப்பதில் ஆர்வம் இருந்தால், அல்லது பாடுவதில் ஆர்வம் இருந்தால், எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அந்த வேலையை எடுத்து அதனை நீங்கள் விரும்பிச் செய்யுங்கள்.

பிடிக்காத ஒரு வேலையைக் கடமைக்கு என்று செய்தால் அது உங்களுக்கு எந்த வகையிலும் பயன் தராமல், உங்கள் வாழ்க்கையையும், நேரத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று தான் பொருளாகும்.

மற்றவர்களுக்காக உங்களுக்குப் பிடிக்காத வேலையை நீங்கள் செய்தால் அது உங்களுக்கு உறுதியாக எந்த ஒரு பலனையும் கொடுக்காது.

ஆம் நண்பர்களே...!

🟡 உங்களுக்குப் பிடித்த வேலை எது...? பிடித்த துறை எது...? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த வேலையை நீங்கள் பிடித்து அனுபவித்து செய்தால், நீங்கள் எதிர்பார்க்காத பயனும் நீங்கள் எதிர்பார்க்காத வெற்றியும் உங்களுக்குத் தானே கிடைக்கும்...!

🟡 அதனால் உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதனை நீங்கள் கண்டறிந்து அதற்கான வேலையை செய்யுங்கள். நீங்கள் ஏதாவது ஒரு செயலை செய்து தான் ஆகவேண்டும். செய்யும் செயலில் விருப்பமில்லை என்றாலும் எப்படியாவது அதில் விருப்பத்தைக் கொண்டு வர முயலுங்கள். அதை விரும்புவதற்கு முயற்சி செய்யுங்கள்...!

🔴 படிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படிப்பதைப் பிடிக்குமாறு எப்படிப் படிப்பது என்பதை ஆலோசனை செய்யுங்கள். உங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலை அதை எப்படி நமக்குப் பிடிக்க வைப்பது என்பதை எண்ணுங்கள். அதுபோல் பிடிக்காத ஒரு செயல் உங்களுக்கு பிடிப்பது போல் தோன்றினால் அதை நீங்கள் விரும்பிச் செய்யலாம்...!!

🔴 ஆனால்!, என்ன செய்தாலும் அந்த செயல் பிடிக்காது என்றால் அந்த செயலை செய்யாமல் இருப்பது நல்லது, உங்கள் வேலையைத் திறம்படச் செய்ய வேண்டுமென்றால் அதனை விரும்பிச் செய்பவராக நீங்கள் இருக்க வேண்டும்....!!!

⚫ உங்கள் வேலையை நீங்கள் விரும்பினால் தவிர, அதனைக் கற்றுக் கொள்ள இயலாது. அதனை விரும்பி செய்தால் நீங்கள் ஆசைப்படுவது உங்களுக்கு மிகவும் அருகில் வரும்...!!!

⚫ நாம் ஈடுபடுகின்ற எந்த செயலானாலும் உள் அன்போடும், பொறுப்பு, கடமை உணர்ச்சியுடன் விரும்பிச் செய்தால் எந்தப் பணியையும் எளிதாக செய்யலாம். அந்தப் பணியில் வெற்றியும் அடையலாம்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.