வாழ்க்கையை அழகாக தெளிவாக கொண்டு செல்ல ஆறு simple advices.

 

1) எதற்கெடுத்தாலும் எல்லாத்துக்கும் கவலை படாதீங்க.

காலையில அழுதா ஈவினிங் சிரிப்போம்..

துக்கமோ மகிழ்வோ எதுவோ அதிக நேரம் நம்ம உடல்நிலை  எடுத்துக்காது. எல்லாம் கொஞ்ச நேரம். மீறி போனா அதை நீங்களே பிடிச்சு தொங்கறீங்கன்னு அர்த்தம். 

2) யதார்த்தம் பழகுங்க.

அதான் முக்கியம்.

யார்‌ வேணா கீழிருந்து மேலையும் மேலிருந்து கீழேயும் ஒரு நாளிலியே மாறிடுவாங்க.எனக்கா 

இந்த நிலைமைன்னு 

வாயடைச்சு போகாதீங்க.

உங்களை விட அவமானபட்டவங்க 

எல்லாம் உலகத்துல இருக்காங்க. 

3) எதையும் ஆழமாக நேசிக்காதீங்க.

எதையும் ஆழமாக யோசிக்காதீங்க.

ரொம்ப சிம்பிள் இது.

நேசித்தலும் அதற்கான 

யோசித்தலும் தான் அழுகைக்கு 

அடிப்படை காரணம் என்ற 

தத்துவத்தை புரிஞ்சுக்கோங்க. 

சமநிலையா இருக்க கத்துக்குங்க.

4.ஒருத்தவங்க போயிட்டாங்கன்னா கெஞ்சாதீங்க.

வேணும் வரை இருந்துட்டு திடீர்னு போறாங்கன்னா கஷ்டபட வேண்டியது அவங்க தான். ‌

நீங்க இல்ல.

உதாசீன படுத்தினா உதறி விடுங்க.

விலகி செல்பவர்களிடம் தானா 

போயிட்டு அன்பை கொட்டாதீங்க..

அதனால் வர அற்ப கவலைகளுக்கு

எல்லாம் இடம் தராதீங்க..

அந்த நினைவுகள் மேலே எழும்பிச்சுன்னா ஒரே போடு போட்டு புதைச்சிடுங்க.

5) ஏமாற்றம் துரோகம்  ரொம்ப

சீரியஸா எடுத்துக்காதிங்க.

Expectations lead to disappointment

பிறப்பு இறப்பு போல துரோகமும் 

மனித வாழ்வில் ஓர் அங்கம்.

ஏமாற்றத்தை ஏற்றுக்கங்க.

அப்பதான் அடுத்த முறை

ஏமாற மாட்டீங்க.

இழப்புகளை இயல்பாக்குங்க.

அப்போதுதான் இழப்புகளை பற்றி

கவலைபட மாட்டீங்க.

அவ்வளவு எளிதில் எவரையும்

நம்பிடாதீங்க.

வாழ்க்கையில் இதான் முக்கியம். 

6.ஆறுதலா இருக்க உங்களை 

நீங்களே தயார்படுத்திக்கங்க.

வேற யாரும் பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்து நிக்காதீங்க.

உங்களுக்கு நீங்கதான் வேலைக்காரன் எஜமான் எல்லாமே. 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.