மீன் பிரியரா நீங்கள்? தவறியும் மீனுடன் எந்த உணவை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்

மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருந்தாலும், சில உணவுகளுடன் மீனை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, செரிமானம் தொடர்பான நோய்களையும் தூண்டலாம். மீன் சாப்பிடும் போது கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என நாம் இங்கு பார்ப்போம். 

முதலில் மீன் சாப்பிடுவதால்  ஏற்படும் நன்மைகள் பற்றி பார்த்து விட்டு மீன் சாப்பிடும் போது கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என பார்ப்போம்.

ஒட்டு மொத்த ஆரோக்கியத்தின் களஞ்சியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவ கூடிய புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் ஆரோக்கியமான வடிவமாக இருப்பது மீன், ஆனால் அந்த மீனை நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்களோ அதற்கு ஏற்ற வகையிலே மீனில் உள்ள பலன் கிடைக்கும்

✅ பால் பொருட்கள்

பால் பொருட்கள் பெரும்பாலும் நாம் அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய ஒன்று. ஆனால், என்னதான் பிரியமான ஒன்றாக இருந்தாலும், மீன் சாப்பிடும் போது, பால் பொருட்கள் சார்ந்த உணவுகளை சேர்த்து உண்ணக் கூடாது. 

✅ சிட்ரஸ் பழங்கள்

மீன் மற்றும் சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிடும் போடு, சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலம் மீனில் உள்ள புரதங்களுடன் வினைபுரியலாம், இதன் விளைவாக விரும்பத்தகாத சுவையையும் ஏற்படுத்தலாம். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. குழந்தைகளுக்கு முதன் முதலில் மீன் வகை உணவுகளை அறிமுகம் செய்யும் போது, இவற்றை தவிர்ப்பது சிறந்தது.

✅ பதப்படுத்தப்பட்ட மற்றும் பொறித்த உணவுகள்

பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகள் ஆரோக்கியமானவை அல்ல.பொறித்த உணவுகள், மயோனைஸ் அல்லது கிரீமி டிரஸ்ஸிங் போன்ற கொழுப்பு அல்லது எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை மேற்கூறியது போல் அஜீரணம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 

✅ மாவுச்சத்துள்ள உணவுகள் 

அதிக அளவு புரதம் நிறைந்திருக்கும் மீன் போன்ற உணவுகளோடு, உருளைக்கிழங்கு அல்லது பாஸ்தா போன்ற கடினமான அல்லது மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது ஒரே சமயத்தில் அதிகப்படியான கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் உட்கொள்ளுவது, செரிமான அமைப்பின் செயல்பாட்டை மந்தமடைய செய்யும். 

✅ காரமான உணவு

காரமான உணவுகளோடு மீனை சேர்த்து சாப்பிடும் போது சுவையாக தான் இருக்கும். ஆனால் அவை வயிற்றை எரிச்சலூட்டி இரைப்பை குடல் அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.